ஆண்டு மூவாயிரம் கட்டுரை
தலைப்பு:-#ஆண்டு_3000ல்_உலகின்_மாற்றங்கள்_எவ்வாறு_இருக்கும்
ஆண்டு 3000 வருடத்தில் அகிலம் எப்படி இருக்குமோ, என சிந்திக்கும்போதே ஆழ்மனது பயம்கொள்கிறது.
வயல்கள் கண்காட்சியில் பார்வைக்காக இருக்கும். காடுகளை கனவில் மட்டும் பார்க்கலாம்.வீடுகளை விட தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகமாகும்.விவசாயம் பழங்கால மனிதன் செய்த தொழில் என்று கணினியில் படிப்பார்கள்.அன்புக்கு விலை இருக்கும்.மதங்களின் எண்ணிக்கை பெருகி மனிதநேயம் கேள்விக்குறியாகும்.
மாத்திரைகள் மட்டுமே உணவாக இருக்கும்.முப்பது வயது வரை வாழ்ந்தால் சாதனையாகும்.பேரன் பேத்தி என்ற உறவை பார்ப்பதற்குள் இறப்பு வரும்.மனித இனம் அரிய வகை உயிரினமாக மாறிக்கொண்டிருக்கும்.
தண்ணீரின் விலை தங்கத்தை விட அதிகமாகும்.தண்ணீரை வங்கியில் சேமிப்பார்கள்.கண்ணீரை குடிநீராக்கும் இயந்திரம் உருவாக்கப்பட்டு எல்லோர் வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கும்.மழை எங்கு பெய்தாலும் உலக தொலைகாட்சிகளில் முக்கிய செய்திதாக ஒளிபரப்பு செய்யப்படும்.
மூளை மாற்றுச்சிகிச்சை எளிதாக செய்வார்கள்.கனவுகளை பதிவிறக்கம் செய்து நினைத்த நேரம் பார்த்து மகிழ்வார்கள்.மாணவர்களை ஏற்றிச்செல்ல பள்ளி விமானம் வரும்.விண்வெளியில் மிதக்கும் விளையாட்டு மைதானங்கள் இருக்கும்.
புவி வெப்பம் அதிகமாகி பனிமலைகள் இல்லாமல் போகும்.கடல்மட்டம் உயர்ந்து பல நாடுகள் மூழ்கி சில நாடுகள் தீவுகளாகும்.நிலவில் நிலம் விற்பனையாகும்.நிழலுக்கும் வரி கட்டுவோம்.
அனைத்தையும் நினைக்கையில் மனிதர்கள் மட்டுமே காரணமாக இருப்பார்கள்.ஆறாம் அறிவால் ஆண்டு 3000 வருடம் உலகம் பல வேதனைகளை அனுபவிக்கும்.அப்போது வாழும் மனிதர்களுக்கு இப்போது பிரார்த்தனை நடக்கட்டும்.
நன்றி கலந்த
நட்புடன்
ந.இராஜ்குமார்