வெட்டியான் ------------------ஊ வ கணேசன்

வெட்டியானுக்குத் தெரியுமா?
சுடுகாட்டில் அழுகிறவனது கவலை
என்றொரு பழமொழி உண்டு....
- ஆனால்
வெட்டியானுக்கும் அழுகை வரும்...
அவனது அழுகை
எவருக்கு புரிகிறதோ....
இல்லையோ....
எமனுக்குப் புரிந்திருக்கிறது....
அதனால் தான்
அவனது வீட்டில்
அடுப்பெரிய
அவ்வப்போது
வீணர்கள் சிலரை
விறகாக
அனுப்புகிறான்...!