எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"ஆதாமின் அப்துல்லா.." புதிய நாவல்.! ------------------------------ ------------------------------- ---------------------...


 "ஆதாமின்  அப்துல்லா.." புதிய நாவல்.!
------------------------------     -------------------------------        ---------------------

வணக்கம் தோழர்களே..!

உங்களுக்கு நேரமிருந்தால்..,உங்களோடு கொஞ்சம் பேசலாமா..?

வெகுநாட்களாக மனதிற்குள் உறுத்திக்கொண்டிருந்த ஒரு மனிதரின் வரலாற்றை,ஒரு நாவல் வடிவத்தில் எழுதிவிடவேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டே இருந்தது. 

முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு இங்கு பதிவு செய்யலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அதனை எழுதிமுடிக்கும் வரை நேரம் காலம் குறித்து எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் எழுதுவது  அவ்வப்போது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. நல்லவேளை..தோழர்.அகன் அவர்களிடமும், தோழர்.ராம்வசந்த் கே.எஸ்.கலை,நிலாசூரியன் உட்பட சிலரிடம் இந்த நாவல் எழுதும் திட்டத்தை சொல்லி வைத்திருந்தேன். அவர்களும் என்னிடம் எப்போது பேசினாலும் ஏன் இன்னும் எழுதவில்லை..? என்பதையே முதல் கேள்வியாக கேட்கத் துவங்கிவிட்டனர்.  இனியும் கால தாமதத்திற்காக சொல்வதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இப்போது என்னிடம் இல்லையென்பதால்…இதனை எழுதிப் பதித்துவிட முடிவு செய்துவிட்டேன்.. ஹஹ்;ஹா.. ஹஹ்ஹா..!

ஒரே ஒரு அத்தியாயத்தையாவது முதலில் பதித்துவிட்டால், தொடர்ந்து ஓரு குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது அடுத்ததை எழுதிவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தானாக உருவாகிவிடும் என்பதாலும் ..இதனைத் துவங்கிவிட்டேன் என்றும் சொல்லலாம்..!

. “ஆதலினால் காதலித்தேன்..!” என்ற எனது நாவலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தளத்தில் அப்படித்தான். உருவானது. அதில் உங்கள் கருத்துக்களால்,வளர்ந்துவரும் ஒரு சிறிய எழுத்தாளனாக எனக்கும் அடையாளமும் கிட்டியது. அதற்காக உங்கள் எல்லோருக்கும் இன்னுமொரு முறை நன்றி..!


“இந்தக் கதையெல்லாம் எங்களுக்கெதுக்கப்பா..?” என்று நீங்கள் ஒருவேளை சலித்துக் கொள்ளவும் கூடும்..!  பரவாயில்லை..நான் சங்கடப்படமாட்டேன். ஏனெனில்,எனது எழுத்துக்களை வாசிக்க நீங்கள்தான் உங்கள் நேரத்தையும், கருத்தையும் செலவிடப்போகிறீர்கள்..அதை எப்போது செலவிடுவது..? என நீங்கள்தான் முடிவு செய்யமுடியும்..! 

இப்போது இதனை வாசிக்க நீங்கள் வந்த இந்த சிலநொடிகளில்,நான் உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு சிறிய செய்தி என்னவெனில்,இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் துவங்குகின்ற,இந்த நாவல் ஒரு சாமானிய மனிதனின் ஒளிவு மறைவற்ற சரித்திரத்தைத்தான் பேசப்போகிறது.!

எனது வீட்டில் இப்போது இருக்கும் அந்த மனிதர்,சற்றே தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, நாளை உங்கள் வீட்டிலும் இருக்கலாம்..! 

நாவலைக்குறித்த செய்திகள் அவ்வளவுதான் தோழரே..! முதல் அத்தியாயத்துடன்-எனது கவிதைப் பகுதியில்- நாளை முதல் தொடர்ந்து சந்திப்போம்..! 

அப்புறம்..தற்போது தளத்தில் தோழர் பழனிக்குமார் அவர்களின் வாழ்க்கைத் தொடர், தோழர் கவிஜியின் ஊக்கத்தால் நம் தோழர்கள் பலரும் எழுதும் “ தேவதைகள் தூங்குகிறார்கள் “ தொடர்கதை, தோழர். சரவணா எழுதிவரும் நடைவண்டி எனும் தொடர், தோழர் ஜின்னாவின் முயற்சியால் நிறையத் தோழர்கள் பங்கேற்றுவரும் காட்சிப்பிழை எனும் கஜல் தொடர் ஆகியவை வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கின்றன. நீங்களும் அவற்றை ஆர்வமுடன் வாசித்து கருத்துக்களால் அவற்றை செழுமைப்படுத்தும் பணியில் பங்கேற்று வருகிறீர்கள்.!

 அதேபோல்..வாய்ப்பிருக்கும்போது,எனக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நிறை குறைகளைச் சுட்டினால் நானும் மகிழ்வேன்.  

இந்த நாவலின் பெயர் "ஆதாமின்  அப்துல்லா.." 

மீண்டும் பேசுவோம்..!  

அன்புடன் 
பொள்ளாச்சி அபி

நாள் : 14-Dec-15, 3:34 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே