என் இதயத்தில் விழிகொண்டு எழுதிவிட்டாய் 555

***என் இதயத்தில் விழிகொண்டு எழுதிவிட்டாய் 555 ***


உயிரானவளே...


என் தோட்டத்து பூக்கள்
இன்னும் மலரவில்லை...

உன்
புன்னகையை காணாமல்...

குயிலின் சப்தம்
ரசிக்க முடியவில்லை...

உன் குரல் என்
செவியில் கேட்காததால்...

என் நினைவு
என்
னும் புத்தகத்தில்...

நீ மை கொண்டு எழுதாமல்
விழிகொண்டு எழுதிவிட்டாய்...

ஒவ்வொரு
பக்கத்திலும் உன்
நினைவுகளே நிரம்பி இருக்கிறது...

என்மீது நீ கொண்ட
நேசம் நிரந்தரமாக இல்லை...

உன் நினைவுகள் தரும் மகிழ்ச்சி
எனக்குள் என்றும் நிரந்தரம்தான்...

உன்
நிஜ
ம் மேகத்தை போன்றது...

உன் நினைவுகள்
ஆகாயம் போன்றது...

என்னுடல்
ஓய்வு எடுக்கிறது இரவில்...

என் இதயதிற்கு
ஓய்வில்லை உன் நினைவில்...

காலங்கள்
காயத்தை
மாற்றவில்லை...

அது
அழகான பொக்கிஷமாய்...

அவ்வப்போது நினைவூட்டுகிறது
கடந்த
காலத்தை...

மலர்ந்த பூக்களிலும்
குயில் சப்த்தத்திலும்...

நீ வாழ்வாய்
என்னுள் என்றும் நீங்காமல்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (27-Oct-22, 9:27 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 394

மேலே