புரிந்தது..

அடி பெண்ணே
நீ மறுக்க மறுக்க தான்
உன் பின் தொடர்கிறேன்

நீ வெறுக்கிறாய் என்று
அன்றே தெரிந்திருந்தால்
அப்போதே நின்று
இருப்பேன்..

என்னை வெறுப்பதற்கு
அனைத்து காரணங்களும்
எனக்கு எதிராக இருந்தால்..

என்னை விட்டுப் போகாமல்
இருக்க ஒற்றைக் காரணம்
கிடைக்கவில்லையா உனக்கு..

நினைத்து நினைத்து
மனம் நொந்து அதிலே
வெந்து போகிறது..

இத்தனை நாள்
புரியாம நடந்த எனக்கு
இன்று புரிந்தது..

எழுதியவர் : (26-Oct-22, 4:59 pm)
Tanglish : purinthathu
பார்வை : 91

மேலே