எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  ''தருவி'' - பெயர் விளக்கம் அல்லது சொற்பொருள்.

த்+அ=த

(த)- குபேரன், பிரம்மன், நான்முகன்.

(தரு)- மரம், கற்பகமரம், இசைப்பாட்டு, ஒருவகை சந்தம்.

(வி)- அதிகம், விசை, அறிவு, கண், இன்மை, பறவை, நிச்சயம், அழகு, முகாந்திரம் வித்தியாசம், ஆகாயம், காற்று, திசை.

தருவி - துடுப்பு.
துன்பக்கடலிலோ, ஆழ்கடலிலோ தத்தளித்து தவிப்பவர்களை கரைசேர்ப்பவன் தருவி, (கரைசேர்ப்பது துடுப்பு).

தான் விரும்பக்கூடிய எந்த ஒரு அரியவகை பொருளையும் தருவித்து அடைந்துவிடும் ஆற்றலும், எந்த ஒரு அரியவகை செயலையும் எளிதில் செய்துவிடும் திறமையும் தருவி என்ற சொல்லிற்கும் பெயரிற்கும் உண்டு.

மரம்போல் பலனை எதிர்பாராமல் மற்றவர்களுக்கு ஈந்து உதவும் வள்ளல் குணம் (தரு)வி- என்ற சொல்லிற்கும் பெயரிற்கும் உண்டு.

--------நிலாசூரியன், தச்சூர்.  

மேலும்

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 21-06-2015 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை "திருக்குறள் தேசிய நூல் மாநாடு"ஒன்றினை அனைத்து இந்திய மக்களின் சார்பாக கடலூர் மாவட்டம் வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்த உள்ளது .

இதை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திருக்குறள் சம்பந்தமான கட்டுரைப் போட்டிகள் , குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தி பங்கு பெறும் பள்ளிகள் ,கல்லூரிகள், மாணவர்களுக்கு தமிழ் அறிஞர்கள் , சான்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங (...)

மேலும்

விழா சிறப்புற நடைபெற , நோக்கம் வெற்றிப்பெற என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் . நண்பர் செம்மொழிப் போராளி கவிஞர் க ச கலையரசன் அவர்களுக்கும் பேராசிரியர் வேல் முருகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பகிர்ந்த நிலா சூரியன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . 08-Jun-2015 3:35 pm

வணக்கம் தோழர்களே...

இன்று ஒரு நற்செய்தியை நாளிதழில் வாசித்தேன். நீங்களும் வாசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதாவது இணைய தளங்களில் மற்றும் பிற ஊடகங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து. இதுதான் அந்த நற்செய்தி.

இதில் சந்தோசம் நிறைய இருந்தாலும் சிறிது சங்கடமும் இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கண் முன்னே ஒரு தவறு நடக்கின்றது, ஆனால் அதைப் பற்றிய கருத்தினை நாம் வெளியே கூறுவது என்பது மிகவும் பிரச்சனையாக இருக்கிறது. தனி நபர்கள் பிரச்னை ஒருபுறம் இருந்தாலும்கூட. மறுபுறம் சட்டமே பிரச்சனையாக இருந்து வந்தது. இன்று அந்த சட்டம் (...)

மேலும்

எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது எந்தச் சுதந்திரத்தின் மகத்துவமும் ..... சரிதானே நிலா சூரியன் ? 26-Mar-2015 5:30 pm
நான் கூட இந்த செய்தியைப் படித்தேன் நிலா. கருத்து கூறுவதற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதென்று நல்லவர்களை பாதிப்புக்குள்ளாக்கும் கருத்துக்கள் இல்லாமல் இருந்தால் சரிதான். நல்லதொரு கட்டுரை நிலா. 25-Mar-2015 8:39 pm
நான் சொன்னது மனிதனுக்கும் மனிதனுக்குமான கருத்துச்சுதந்திரம். மனிதனுக்கும்.. காட்டேரிக்கும் இடையே கருத்து சுதந்திரம் எதற்கு. போட்டுத்தாக்கு ! நன்றி நட்பே 25-Mar-2015 5:30 pm
சுதந்திர நாடு நாடு என்று சொன்னால் மட்டும் போதுமா ...மாறட்டுமே மகிழ்ச்சிதான் .. 25-Mar-2015 5:09 pm

தமிழனின் போர்நெறி மற்றும் வீரம்...

தமிழனின் வீரம் நம் எல்லோருக்கும் அறியும், தமிழன் போர்க்களத்தில் மார்பில் காயம்பட்டு சாவதையே தங்கள் மரபாகக் கொண்டவன், சிறு வயதிலேயே வாழ்க்கைப் பாடங்களோடு சேர்த்து வீரமும் கற்பிக்கப்பட்டது, போர் பயிற்சி, வாற் பயிற்சி, வேல் பயிற்சி, சிலம்பம் போன்ற தர்காப்புகளைகளும், யானையேற்றம், குதிரையேற்றம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டன.

போர்க்களத்தில் காயம்பட்டு உடலில் அதிக விழுப்புண்களை பெறுவதையே தமிழர்கள் பெருமையாக கருதினர், அதிக தழும்புகளை பெற்றவர்களை நாட்டினர் பெரிதும் மதித்தனர், மாவீரனென்று துதித்தனர்.

தனது சிறுவயது மகன் போர்க்களத்தில் முதுகில் காயம்பட்டு செ (...)

மேலும்

போருக்கும் போராட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாடு எல்லைத்தாண்டிச் சென்று இன்னொரு நாட்டின்மீது தங்கள் பரிவாரங்களை ஏவிவிட்டு சண்டையிடுவதும், அதை எதிர்த்து அந்த நாட்டுப் படைகள் சண்டையிடுவதும் போராகும்.

ஒரு நாட்டிலே மக்களோ, அல்லது ஒரு ஒடுக்கப்பட்ட இனமோ, அல்லது யாராவது ஒரு தனி மனிதனோ, அந்த நாட்டின் அரசிடம் தங்கள் உரிமையையோ அல்லது வாழ்வாதாரங்களையோ கேட்டுப் போராடுவது போராட்டமாகும்.

மேலும் ஒரு அரசு செய்யும் ஊழலை எதிர்த்தும், அந்த அரசின் முறையற்றப் போக்குகளை கண்டித்தும், மக்கள் சக்தியோடு சேர்ந்தோ அல்லது தனி மனிதனாகவோ போராடினாலும் அது போராட்டமே ஆகும்.

இந் (...)

மேலும்

மிக்க நன்றிகள் தோழி கயல்விழி அவர்களே.... 18-Nov-2014 4:03 pm
உண்மைதான் தோழரே... முன்பெல்லாம் அகிம்சை போருக்கு ஒரு மரியாதை இருந்தது, இப்ப்பொழுது அது சுத்தமாக இல்லை........ அகிம்சை போராட்டங்களை ஆயுதங்கள் கொண்டு ஒதுக்கும்பொழுது என்ன செய்வது? 18-Nov-2014 4:02 pm
மிக்க நன்றிகள் தோழரே 18-Nov-2014 4:00 pm
வரவில் மகிச்சி, நன்றிகள் அய்யா... 18-Nov-2014 4:00 pm

!!!============(((விடுதலை போராட்டம் )))==============!!!

நிலபரப்பு, மக்கள்தொகை, வாழ்வாதாரம், கலாச்சாராம், ஆட்சி அதிகாரங்கள் இவைகள் எல்லாம் பல்கி பெருகி இருக்கின்ற ஒரு பேரினவாத சக்தியிடம் அகப்பட்டுக்கொண்ட ஒரு சிறுபான்மை இனம், பெரும்பான்மை சக்தியினால், தங்கள் வாழ்வாதாரம் சீர்குலைந்து, அதிகாரப் பகிர்வுகளின்றி, அரசியல் உரிமையின்றி, மனித உரிமைகளின்றி, பண்பாட்டு விழுமியங்களை தொலைத்து, நிலங்களை இழந்து, மொழியினை மறந்து, அதிகாரவர்க்கங்களின் ஆளுமைக்கு உட்பட்டு, உறளில் அகப்பட்டுக்கொண்ட எறும்புகளைப்போல், அன்றாடம் நசுக்கப்பட்டும், அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களை சுமந்து, தொலைந்துகொண (...)

மேலும்

குழந்தைகள் யோகிகள்
கள்ளம் கபடம் அறியாதவர்கள்...

மகிழ்ச்சியில் சிரிக்கும்
துன்பத்தில் அழுகும்
உன்மையான உணர்வின் வெளிப்பாடுகள்...

சுயநலமற்ற நிலா சூரியன்கள்...

இன்றைக்கும் என்றைக்கும் - இந்த
மானுடத்தின்
நிரந்தர எடுத்துக்காட்டுகள் - வாழ்க்கையின்
துருப்புச்சீட்டுக்கள்....

ஒட்டுமொத்த பிரிவினைகளுக்கும்
வக்கிரங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்..

நிலுவையுலகை மாற்றும்
வல்லமை கொண்டவர்கள்...

குழந்தைகள் யோகிகள்
கள்ளம் கபடம் அறியாதவர்கள்...!!!


-----------------நிலாசூரியன்.

========

கடந்த ஆண்டு பங்குனி மாதம் 9 ஆம் நாள், புதுச்சேரி புதிதாக பூத்துக் குலுங்கியத (...)

மேலும்

அலகுகளால் செதுக்கியகூடு நான் 25 நூல்கள் வாங்கி இருக்கிறேன் - ஆனால் இதுவரை கைக்கு வந்து சேரவில்லை, சித்திரை 11 ல் நிச்சயம் என் கைகளில் இருக்கும். அய்யா அகன் அவர்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள் தோழரே.... ஒரு வார காலத்தில் நூல் உங்கள் கைகளில் இருக்கும். நன்றிகள் தோழரே.... 17-Apr-2014 1:48 pm
வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் பலருக்கும் கேட்காமல்கூட இருக்கலாம் அல்லவா....? (அதாவது தோழமைகள் பலருக்கும் தெரியாமல் கூட இருக்கலாம் இல்லையா?) - ஆகையால் பலருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதற்காகவே இதை நான் பதிவு செய்தேன் அய்யா......! நன்றிகள் அய்யா. 17-Apr-2014 1:45 pm
இன்னும் இந்த கூடு எனக்கு கிட்டவில்லை. வாய்ப்பு கிடைத்தால்..வரம் கிடைத்தால் .. படித்து ரசனை கடலில் மூழ்க விரும்புகிறேன். ஆவல் தூண்டும் வகையில் எழுதிவிட்டீர்கள். என் தவிப்புக்கு நான் என்ன எப்படி சமாதானம் செய்யப்போகிறேனோ? . 17-Apr-2014 12:59 pm
வாசிக்கவே கூடாதென்று கங்கணம் கட்டிருப்போர் மத்தியில் கங்கு வரிகள் அளித்த சூரியனுக்கு நிலா குளிர்ச்சி அனைய வாழ்த்துகள்.. 17-Apr-2014 12:49 pm

மேலே