போருக்கும் போராட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்....
போருக்கும் போராட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நாடு எல்லைத்தாண்டிச் சென்று இன்னொரு நாட்டின்மீது தங்கள் பரிவாரங்களை ஏவிவிட்டு சண்டையிடுவதும், அதை எதிர்த்து அந்த நாட்டுப் படைகள் சண்டையிடுவதும் போராகும்.
ஒரு நாட்டிலே மக்களோ, அல்லது ஒரு ஒடுக்கப்பட்ட இனமோ, அல்லது யாராவது ஒரு தனி மனிதனோ, அந்த நாட்டின் அரசிடம் தங்கள் உரிமையையோ அல்லது வாழ்வாதாரங்களையோ கேட்டுப் போராடுவது போராட்டமாகும்.
மேலும் ஒரு அரசு செய்யும் ஊழலை எதிர்த்தும், அந்த அரசின் முறையற்றப் போக்குகளை கண்டித்தும், மக்கள் சக்தியோடு சேர்ந்தோ அல்லது தனி மனிதனாகவோ போராடினாலும் அது போராட்டமே ஆகும்.
இந்த போராட்டத்தை நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு சனநாயக ரீதியில் முன்னெடுக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு.
எந்த ஒரு போராட்டமும் அகிம்சையிலேதான் தொடங்குகிறது, அதன் முடிவுகளை நிர்ணயிப்பது காலத்தின் கைகளிலேயே இருக்கின்றது.
--------------------நிலாசூரியன்.