எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழனின் போர்நெறி மற்றும் வீரம்... தமிழனின் வீரம் நம்...

தமிழனின் போர்நெறி மற்றும் வீரம்...

தமிழனின் வீரம் நம் எல்லோருக்கும் அறியும், தமிழன் போர்க்களத்தில் மார்பில் காயம்பட்டு சாவதையே தங்கள் மரபாகக் கொண்டவன், சிறு வயதிலேயே வாழ்க்கைப் பாடங்களோடு சேர்த்து வீரமும் கற்பிக்கப்பட்டது, போர் பயிற்சி, வாற் பயிற்சி, வேல் பயிற்சி, சிலம்பம் போன்ற தர்காப்புகளைகளும், யானையேற்றம், குதிரையேற்றம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டன.

போர்க்களத்தில் காயம்பட்டு உடலில் அதிக விழுப்புண்களை பெறுவதையே தமிழர்கள் பெருமையாக கருதினர், அதிக தழும்புகளை பெற்றவர்களை நாட்டினர் பெரிதும் மதித்தனர், மாவீரனென்று துதித்தனர்.

தனது சிறுவயது மகன் போர்க்களத்தில் முதுகில் காயம்பட்டு செத்திருந்தால் அவனுக்கு பாலூட்டிய மார்பிரண்டையும் அறுத்தெறிவேன் என்று கூறிய வீரத் தமிழச்சியின் செயலை நினைத்தால் இப்பொழுதும் உடல் புல்லரிக்கதானே செய்கிறது? போர்களத்தில் முதுகில் காயம்பட்டதால் அதை மாபெரும் அவமானம் என்று எண்ணி வடக்கிருந்து உயிர்விட்ட சேரனின் பெருமையை இன்றைய உலகறியுமோ? ஆனால் தமிழன் பேசுகிறான் உலக வரலாறுகளை. ஆனால் உலகம் இன்னும் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு வரலாறு தமிழனின் வரலாறு.

கொரில்லா போர்முறையில் அன்றைய வெள்ளையர்களை கதிகலங்கச் செய்த தீரன் சின்னமையை நினைத்தால் உள்ளத்தில் ஏதோ உணர்வு படர்கிறதுதானே?

காளையை அடக்கி கல்யாணம் செய்வதும், புலியின் பல் பிடுங்கி தாலி செய்வதும் தமிழனின் வீர வரலாற்றினை பறைசாற்றுகின்றன..

தமிழன் தனக்கென்று ஒரு போர் மரபை வைத்திருந்தான், போர் தொடங்குவதற்கு முன்பு எதிரி நாட்டு அரசனுக்கு தகவல் சொல்லி, யுத்தம் நடத்துவதற்கான இடத்தையும் தேதியையும் முடிவு செய்வான். யுத்த சமயத்தின்போது வயதானவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், குடிமக்களையும் பாதுகாப்பான இடங்களில் வைப்பது தமிழரசர்களின் வழக்கம், அதற்காகவே பெரிய பெரிய அரண்மனைகளையும், கோட்டைகளையும் எழுப்பினான். யுத்தக் களங்களிலே வயதானவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், நோயாளிகளையும் கொல்வதென்பது தமது வீரத்திற்கே மாபெரும் இழுக்கு என்றும், நம் தமிழ் மரபினருக்கே அது அழியாத அவப்பெயரை உண்டாக்கிவிடும் என்பதையும் நெஞ்சில் சுமந்து நின்றவன் தமிழன்.

இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ சொல்லிகொண்டே போகலாம்,

இப்படிப்பட்ட மரபணுவில் முளைத்த தமிழன் ஒருகாலமும் கோழைகளாக வாழ சாத்தியமே இல்லையென்று சங்கே முழங்கிவிடு.


----------------------நிலாசூரியன்.

நாள் : 18-Nov-14, 3:11 pm

மேலே