எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

!!!============(((விடுதலை போராட்டம் )))==============!!! நிலபரப்பு, மக்கள்தொகை, வாழ்வாதாரம், கலாச்சாராம்,...

!!!============(((விடுதலை போராட்டம் )))==============!!!

நிலபரப்பு, மக்கள்தொகை, வாழ்வாதாரம், கலாச்சாராம், ஆட்சி அதிகாரங்கள் இவைகள் எல்லாம் பல்கி பெருகி இருக்கின்ற ஒரு பேரினவாத சக்தியிடம் அகப்பட்டுக்கொண்ட ஒரு சிறுபான்மை இனம், பெரும்பான்மை சக்தியினால், தங்கள் வாழ்வாதாரம் சீர்குலைந்து, அதிகாரப் பகிர்வுகளின்றி, அரசியல் உரிமையின்றி, மனித உரிமைகளின்றி, பண்பாட்டு விழுமியங்களை தொலைத்து, நிலங்களை இழந்து, மொழியினை மறந்து, அதிகாரவர்க்கங்களின் ஆளுமைக்கு உட்பட்டு, உறளில் அகப்பட்டுக்கொண்ட எறும்புகளைப்போல், அன்றாடம் நசுக்கப்பட்டும், அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களை சுமந்து, தொலைந்துகொண்டு இருக்கிற சிறுபான்மை இனம். இனியும் இப்படி இருக்க இயலாது, எங்களை உங்கள் பிடியில் இருந்து விட்டுவிடுங்கள். எங்கள் நிலம் எங்கள் மொழி எங்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கூறுகளை நாங்கள் காப்பாற்றிக்கொண்டு, சுயாட்சியோடும் சுய உரிமையோடும் வாழவேண்டும் என்று வெகுண்டு எழுந்து நிற்பதே விடுதலை போராட்டமாகும், உங்களோடு எங்களால் வாழ இயலாது தயவு செய்து உங்களின் கோரப்பிடியில் இருந்து விட்டுவிடுங்கள் என்று கேட்கும் சிறுபான்மை மக்களை.

தங்கள் பிடியில் இருந்து விடுவித்து அவர்களும் வாழ்ந்து போகட்டும் என்று என்னாத பேரின வேரிவாதம், விடுதலைக் கோரும் மக்களை தங்கள் கூலிப்படைகளின் மூலம் அடக்கி ஒடுக்க முற்படும், விடுதலை தாகத்தில் வீறுகொண்டு எழும் மக்களை அடக்க, அதிகாரக் கூலிப்படைகள் ஆயுதங்களை பிரயோகிக்கும், இதன் விளைவு, அந்த ஆயுத அதிகாரவர்க்கத்திடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள விடுதலைபோராட்ட சிறுபான்மை இனம் தங்கள் கையிலும் ஆயுதம் எடுக்கும்.

ஆனால் இவர்கள் ஆயுதம் எடுத்தது குற்றம் என்று பேரினவாதம் கூறும். ஒரு மனித இனம் இன்னொரு மனித இனத்தை தாழ்மையானவர்கள் என்று கருதுவதோ, அவர்களை சரிசமமான முறையில் நடத்தப்படாமல் ஒடுக்குவதோ மிகப்பெரிய குற்றம் என்பதை இதுவரை எந்த ஒரு பேரினவாத சக்தியும் ஒப்புகொண்டதே இல்லை.

பிரிவினைவாத கோட்பாடுகளை கொண்ட அதிகார வர்க்க ஆளுமைகள் இருக்கும்வரை, சிறுபான்மை இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் தொடரும்.

எனவே, ஒரு பேரினவாத சக்தியிடம் அகபட்டுகொண்ட சிறுபான்மை இனம், அவர்களின் கொடூர ஆளுமையின் போக்கை பொறுக்க முடியாமல், ஐயோ சாமி எங்களை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிகேட்டு, அதில் முடியாமல் போனால், கடுமையான போராட்டத்தின் மூலம் தம்மை பேரிவாத பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள முயலுவதே விடுதலை போராட்டமாகும்.


----------------------------------நிலாசூரியன்.

நாள் : 16-Nov-14, 3:01 pm

மேலே