வாழ்க்கை என்றால் என்ன

வாழ்க்கையின் அர்த்தம் என்ன, பதில் சொல்லி பயன் என்ன?
வாழ்க்கை ஒரு குதூகலம், ஆனந்தமா பறக்க எங்கே ஏவுகலம்?
வாழ்க்கை ஒரு போராட்டம், இருந்தும் போடுறியே குத்தாட்டம்
வாழ்க்கை ஒரு பயணம், பயணம் செல்ல நல்ல துட்டு வேணும்
வாழ்க்கை ஒரு ஏமாற்றம், இதை மறக்கத் தேவை ஒரு மாற்றம்
வாழ்க்கை ஒரு கண்துடைப்பு, எனவேதான் தொண்டையடைப்பு
வாழ்க்கை ஒரு திரைப்படம், ஆனால் இப்படியா ஒரு கலப்படம்?
வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி, மகிழ்ச்சியை போடு துண்டை கிழிச்சி
வாழ்க்கை ஒரு சோதனை, சாதனை பேசாதே, எல்லாம் வேதனை
வாழ்க்கை ஒரு நறுமணம், மணம் இல்லாட்டி கட்டிக்க கோவணம்
வாழ்க்கை ஒரு ஓடம், ஓடம் முழுகிவிட்டால் எங்காச்சும் ஓடு ஓட்டம்
வாழ்க்கை ஒரு மாயம், ஆமாம் திறந்துவச்ச LGடப்பா பெருங்காயம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Apr-24, 11:22 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 48

மேலே