நீர் வேர்களுக்கானது மட்டுமில்லை

நானும், நீயும்
ஒரே சாயலோடுதான் இருக்கிறோம்.

இந்த தேசத்தின்
எதிர்காலம் குறித்த கனவுகள்...
உனக்கும், எனக்கும்
ஒரே மாதிரியானவை.

கணியன் எழுதிய
"யாதும் ஊரே ...யாவரும் கேளிர்"
நமது அன்பின் தொடர்ச்சிதான்.

உனது உதடுகளின் புன்னகை...
எனது பாரா-ஒலிம்பிக் தங்கத்தினால்
எனில்...
எனது அறிவு ஒளிர்கிறது
அனந்தமூர்த்தியின் எழுத்துக்களால்.

நானும், நீயும், விலங்குகளும் கூட...
நீர் அருந்தக்
குளம் தந்த பரம்பரைகள்
நம்முடையவை.

வாழ்வின் வலியில்...
நீரின்றிக் கருகுகிறது
நம் தேசத்தின்
வேராய் இருக்கும் எனது குறிஞ்சி.

அரசியலின் புனைவுகளால்...
இடைவெளிகளாகி...
நதியின் பாதைகளில்
இன்று உன்
கான்க்ரீட் இதயங்கள்.

வேர்கள்...
நீரினைப் பெறுவது

வேர்களுக்காக மட்டுமல்ல....

என்பதை
இந்த தேசத்தில்
எந்த அரசியல்
நமக்கு சொல்லித் தரக்கூடும்?

எழுதியவர் : rameshalam (17-Sep-16, 11:57 am)
சேர்த்தது : rameshalam
பார்வை : 105

மேலே