என் கவிதைகள் உயிர்பெரும்
என் கவிதைகள்
ஒரு நாள்
உற்ச்சாக தேரில் ஏறி
ஊர்வலம் போகும்...
புத்தாடை உடுத்திக்கொண்டு
பூச்சூடி பார்க்கும்...
பனித்துளியாய் மாறும்
பவளம்போல் ஜொலிக்கும்...
ஆனந்தம் அள்ளிக்கொண்டு
ஆகாயம் போகும்...
தேனள்ளித் தெளித்துச்செல்லும்
தென்றலாய் மாறும்...
கல்லாய் மண்ணாய் மரமாய்
மரித்துகிடக்கும்
என் கவிதைகள்
உயிர்பெற்று எழும்
உன் பெயரை தொழும்...