நெஞ்சில் நிறுத்துதம்பி நீ - நம் உரத்த சிந்தனை, செப்டம்பர், 2016

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்

நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! 1 - வ.க.கன்னியப்பன்

இரு விகற்ப நேரிசை வெண்பா

கள்குடி யோடு கொலைகளவு ஆகியவை
எள்ளளவும் உந்தனது எண்ணத்தில் – உள்ளாது
தஞ்சமென வந்தோர்க்கு நீஉதவ தக்கபடி
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! 2 - வ.க.கன்னியப்பன்

நம் உரத்த சிந்தனை, அக்டோபர், 2016 வெண்பாப் போட்டிக்கு ஈற்றடி: காலத்தை வெல்லும் கரு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-16, 12:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 151

மேலே