வரதட்சணை எனும் கொடுமை

பெற்றான்
பெருமையுடன்
பிரிந்தான்
பிரியமுடன் மணவறையில்
ஆனந்த கண்ணீர் கொண்டு தன்
ஆசை மகளை தந்தை .........
பொறுமை இல்லை
புருசனுக்கு தன் மனைவி
கொண்ட மாங்கல்லியமும்
சூடிய மாலையும்
வைத்த பொட்டின் ஈரமும்
இன்னும் காயவில்லை
கை பிடித்து வந்து உனை
காப்பேன் என் ஆயுள் முழுதும்
என கூறிய வாய்
இன்று
கழுத்தை பிடித்து வெளியே தள்ளி
கொண்டு வா பல லட்சங்களை
என்றது ...........
பிள்ளை,
பெறுவாள்
பெருமை சேர்ப்பாள்
கொண்டவனோடு ஆனந்தம்
கொள்வாள் என
கண்ணில் கனவுடன் காத்திருந்த தந்தை
கண் முன்னே தொங்கினாள் பிணமாய் ............
பெண்ணாய் பிறந்து
சகோதரியாய்
மனைவியாய்
தாயாய் என பல
ரூபம் கொள்ளும் மாதர்குலத்தை
முதிர்ந்த கன்னியாய்
மூலையில் வாழாவெட்டியாய்
சவமாய் மாற்றும்
மனித உருவில் அலையும்
மாவிலங்குகளே வரதட்சணையை விடுங்கள் ............
கையாள் ஆகாத
கனவன நீ வாழ்நாள் முழுவதும்
கை பிடிக்கும் துணையிடம்
பனக்கைதியாய் நிற்க்க...........
உயர் பெண்மையை
உன்னிடம் தொலைத்து நீயே
பெருமை துணை என
உன்னையே நம்பி வரும்
உயர் தாரத்தை உதறி தள்ளுவது
ஞாயமா கணவனே .............
கணவனே ,
உன் உழப்பால் மனைவி
வாழ்ந்திட வேண்டும் ...........
அவள் அருகில் நீ
மகிழ்ந்திட வேண்டும் ..............
உங்கள் உறவால் பெற்றவர்கள் மன
நிறைவடைந்திட வேண்டும் ................
பிள்ளைகளை பெற்று ஆனந்தம்
கொள்ள வேண்டும் .................
சமூகத்தில் நீங்கள்
உயர்ந்திட வேண்டும் ................
இவையே வாழ்க்கை
இதை வரதட்சணையால் வலுவிழக்க செய்யாதே .................
சிந்திப்பீர் ! செயல்படுவீர்.