விட்டு விடு நட்டு விடு

ஓசோன் அடுக்கிலே ஓட்டை
உலகில் கிளப்பிவிடுதே சூட்டை;
உயிரினங்களுக்கோ அது விளைவிக்கும்
உடல் நல சீர்கேட்டை.
மரங்கள் தான் தடுத்துவிடும்
சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டை.
அதை தெரிந்தும் உணர்ந்தும்
ஏனிந்த கொடிய மரவேட்டை..?
விட்டு விடு வேரறுக்கும் அச்சேட்டை
நட்டுவிடு நல்மர நாற்றை...!

எழுதியவர் : சுடரோன் (15-Sep-16, 2:39 am)
பார்வை : 81

மேலே