ஐ. ரமேஷ் பாபுஜி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஐ. ரமேஷ் பாபுஜி
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Sep-2014
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  33

என்னைப் பற்றி...

தமிழில் ஆர்வம் உடையவன். ஆரோக்கியத்திலும் ஆன்மிகத்திலும் கொஞ்சம் ஆர்வம் உண்டு.

என் படைப்புகள்
ஐ. ரமேஷ் பாபுஜி செய்திகள்
ஐ. ரமேஷ் பாபுஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2020 2:44 pm

கீதையைப் படித்துவிட்டேன்
பலனை எதிர்பார்க்காமல்
இருக்க முடியவில்லை;

புத்தமும் படித்துவிட்டேன்
கொள்ளும் ஆசையதனை
விலக்க முடியவில்லை;

பைபிளையும் படித்துவிட்டேன்
மறு கன்னத்தைக் காட்ட
இன்னும் இயலவில்லை;

குர்ஆனையும் படித்துவிட்டேன்
இரப்போர்க்கு எல்லாம்
ஈய முடியவில்லை...

என் பொல்லா மனமது
இறக்கும் வரைக்கும்
நான் கொடும்மனிதனே...!

மேலும்

நண்பரே போகும் வழி எத்தனையோ எது நல்ல வழியோ அவ்வழியே சென்றோமானால் பயணம் இனிதே முடியும் அதுபோல நம்மை ஆட்டிப்படைக்கும் சபலங்களை அறிந்து வேரோடு அறுத்து ஒதுக்கி புலன்களை அடக்க கீதைக்கு காட்டும், பைபிள் காட்டும், குரான் காட்டும் வழிகள் அத்தனையும் மனதில் புகுமே 24-Aug-2020 1:17 pm
ஐ. ரமேஷ் பாபுஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2019 9:52 pm

!

வாளால் மாய்ந்தவர்களைவிட
நாவால் நோயிலும் சாவிலும்
வீழ்ந்து கொண்டிருப்போரின் இருப்போ
நகரங்களில் காற்றின் மாசுக்களைப் போல...!

நஞ்சேற்றி வீசிய வார்த்தைகளோ சாகாமல்
உடனிருப்போரை சாகடிக்கும்; பல சமயம்
அவ்வார்த்தைகள் வீசியவரையும்
வாழவிடாமல் மாளவைக்கும்.

நஞ்சோ நா வீசும் வார்த்தையில் மட்டுமல்ல
நா(ம்) விழுங்கும் நாகரிக உணவிலுந்தான்;
சேர்ந்தாரைக் கொல்லும் கொடியோரைப் போல
உடல் சேர்ந்து சாகடிக்கும் அவ்வுணவும்.

'அமிழ்தால் செய்த நஞ்சு' அக்கால சீதையெனில்
'சுவையால் செய்த நஞ்சு' இக்கால உணவு;
சேரவிடாதவரை தயை காட்டாது கொன்றது முதல் ரகம்
சேர்ந்தோரை சுவையூட்டி சாகடித்தல் இரண்டாவது ரகம்.

மேலும்

ஐ. ரமேஷ் பாபுஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 2:07 am

தீர்மானி...தேர்ந்தெடு...!

இரவும் பகலும் இயற்கை
உனக்கு அளித்தது.. மாறாதது.

ஆனால் உனது
இன்பமும் துன்பமும்...?
நீயே உனக்கு கொடுப்பது.

உன் மனமதில்
எண்ணங்கள்தான் உன்
இன்பமும் துன்பமும்.
எண்ணங்களை மாற்றினால்
எல்லாமே மாறிவிடும்.

தீர்மானி...தேர்ந்தெடு...!

உடலையும்உயிரையும்
வழங்கியது இயற்கை.
ஆனால் உனது ஆரோக்கியம்..?
உனது உணவில் தான்,

உணவாக உனக்குள்
நீ தள்ளுவது செய்வது
இரண்டுதான்-ஒன்று
ஆரோக்கியத்தைக் கொடுக்கும்
இல்லை கெடுக்கும்.
ஆம்...
உன் ஆரோக்கியம்
உனது நாவிலுந்தான்.
உணவை மாற்றினால்
உடலும் மாறிவிடும்.

தீர்மானி... தேர்ந்தெடு...!

கைகளையும் கால்களையும்
தந

மேலும்

உண்மைதான்.., ஆரோக்கியமான உலகம் மனிதம் வாழும் வரை நீடிக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 11:30 am
ஐ. ரமேஷ் பாபுஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2017 10:50 am

பூரித்திருக்கிறது எம் உள்ளமெல்லாம்
ஆர்ப்பரித்து எழுந்துள்ள இளஞ்சிங்கங்களின்
அடங்கா நல் ஆற்றலைக் கண்டு!

செய்வதறியாமல் முடமாகிவிட்டனர்
சொல்வித்தை மட்டும் வைத்து நம்மை
கொள்ளையிட்ட பல பொல்லாத அரசியல்வாதிகள்!

எழுச்சிமிகு இளைஞர் உம் ஒற்றுமை
வளமிகு நம் தமிழகத்தை மீண்டு
எழச் செய்யும் மிக விரைவில்!

'பொன்னுக்கு தீ'யென பரவட்டும்
என்றுமிந்த பெருமைமிகு நம்
தொல் தமிழுணர்வு. அதில்
மண்ணெங்கும் தீய்ந்து ஒழியட்டும்
நமை முடக்கும் தீயனவெல்லாம்!

நம்பிக்கை பூத்துவிட்டது- இனி
நதிகளெல்லாம் வரம்புகளைத் தாண்டி
ஆர்த்தழுவும்; நமது மலட்டு மண்ணெல்லாம்
மீண்டும் பூப்படையும்!

'ஏற்றம்' கண்டு இயற்கை

மேலும்

ஐ. ரமேஷ் பாபுஜி - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2014 11:03 pm

தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...

விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....

நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...

அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?

உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?

தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...

வண

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து உணர்ந்தமைக்கு நன்றிகள் பல....! 07-Dec-2014 11:48 am
புரட்சித் தீ வரிகள் தோழரே... தொடருங்கள் 07-Dec-2014 11:32 am
வரிக்கு வரி வாசித்து வாரி வாரி கருத்து மழையை பொழிந்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 23-Nov-2014 4:46 pm
விதையாய் வீழ்ந்திடு புதுமரமாய் எழுந்திடு... கனி கொடு நாளை விழுமே கழுத்தினில் மாலை..... அருமை அருமை தோழ................ 23-Nov-2014 4:30 pm
ஐ. ரமேஷ் பாபுஜி - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2014 8:13 pm

இரவைக் கூட பகலாய் மாற்றி
.....எடுத்துத் தருவேன் உன்கையில் - அந்த
சிரமத்தில்என் இதயம் அறுந்தால்
.....போட்டுக் கொள்வேன் ஒருதையல்

கோடை வெயிலும் குளிரும் உந்தன்
.....கண்கள் பொழியும் பார்வையிலே! - உன்
ஆடையோடு என்னைச் சேர்த்து
.....போர்த்திக் கொள்ளடி போர்வையிலே!

புரிந்து வாழ காதல் நமக்குள்
.....இருக்கும் வரையில் என்னபயம் - நம்மை
பிரிக்க நினைத்த எமனும் கூட
.....தோற்றுப் போனான் பலசமயம்

மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால்
.....மருந்தாய் எனக்கொரு முத்தமிடு - நான்
பிழைத்து வந்து மீண்டும் உனக்கு
.....திருப்பிக் கொடுக்க மிச்சம்விடு

ரத்தம் என்னுள் உறைந்தது உந்தன்
..

மேலும்

மிக்க நன்றி தோழரே... தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மகிச்சி... 07-Jun-2015 1:06 am
நிறைவான கவிதை அழகிய வரிகள் சுமையான காதலுக்கு சுகமான கவிதை 07-Jun-2015 1:03 am
மிக்க நன்றி தோழரே.... தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி கொண்டேன்.... 01-Nov-2014 4:34 pm
மறந்து உன்னை வாழ்வதென்றால் .....இறந்து போவேன் அப்பொழுதே ! - வாய் திறந்து சொல்லடி என்னை மட்டும் .....நேசிப்பதாக இப்பொழுதே!.......... இதை விட மன உறுதியையும் காதலையும் தெளிவாக்கிட முடியுமா?...அருமை.! 01-Nov-2014 3:38 pm
ஐ. ரமேஷ் பாபுஜி - ஐ. ரமேஷ் பாபுஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2014 5:50 pm

வலியைப் புரிந்து கொள்
வாழ்க்கைப் புலப்படும்;
வலியைக் கடந்து செல்
நல்லின்பம் உன் வசப்படும்.

வலியைக் கடந்து நின்ற
கல் தான் கடவுளாகிறது;
வலியை உணர்ந்த பின் தான்
பொன்னும் அவனுக்கு அணியாகிறது;
பிரிவின் வலியறிந்தப் பூக்கள்தான்
அவனை அலங்கரிக்கின்றன;
தீச்சுடும் வலியறிந்த திரி தான்
தீபமாகிறது ஆலயத்தில்.

ஆம்...
வலிபடும் பொருளெல்லாம் பிறர்
வழிபடும் பொருளாகின்றன.

வாலிபக் கன்றுகாள்!
வலி விலக்கப்பாராதீர்....நீங்கள்
மிதிபடுபொருளாகிவிடுவீர்.

வலியுணர்ந்து வலி கடந்து செல்லுங்கள்- பலர்
உங்கள் வழி தேடி வருவார்கள்...
உங்களின் புகழ் பாட வருவார்கள்.

புரிந்துகொள்ளுங்கள்...
வெற்றிக்கு

மேலும்

வாழ்த்துக்கு நன்றி 23-Oct-2014 4:53 pm
அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே