தீர்மானிதேர்ந்தெடு

தீர்மானி...தேர்ந்தெடு...!

இரவும் பகலும் இயற்கை
உனக்கு அளித்தது.. மாறாதது.

ஆனால் உனது
இன்பமும் துன்பமும்...?
நீயே உனக்கு கொடுப்பது.

உன் மனமதில்
எண்ணங்கள்தான் உன்
இன்பமும் துன்பமும்.
எண்ணங்களை மாற்றினால்
எல்லாமே மாறிவிடும்.

தீர்மானி...தேர்ந்தெடு...!

உடலையும்உயிரையும்
வழங்கியது இயற்கை.
ஆனால் உனது ஆரோக்கியம்..?
உனது உணவில் தான்,

உணவாக உனக்குள்
நீ தள்ளுவது செய்வது
இரண்டுதான்-ஒன்று
ஆரோக்கியத்தைக் கொடுக்கும்
இல்லை கெடுக்கும்.
ஆம்...
உன் ஆரோக்கியம்
உனது நாவிலுந்தான்.
உணவை மாற்றினால்
உடலும் மாறிவிடும்.

தீர்மானி... தேர்ந்தெடு...!

கைகளையும் கால்களையும்
தந்ததின் மூலம் இயற்கை.

இயற்கை தந்த அவயங்களை
இயக்குவதும் முடக்குவதும்
உன்னிடந்தான் உள்ள்து.
இயக்கம்தான் உயிர்ப்பு.
முடக்கம்,,.?
புரிந்துகொள்
இருக்கும் வரை
உயிர்ப்பும் உன்னால்தான்...!

பிறக்கும் முன்னே
தாய் மடுவில்
பாலூறச் செய்த
இந்த விந்தை இயற்கை
தான் ஈன்ற
உனக்கும் மற்ற உயிர்க்கும்
உணவையையும் மருந்தையும்
குளிரூட்டி, நெகிழியிலுமா
வைத்திருப்பாள்....?!

தீர்மானி.... தேர்ந்தெடு....!

நீ வாழ்வது மட்டுமல்ல
பின்னும்
உன் பிள்ளைகளுக்காக
இன்னும்
இயற்கை நீடிப்பது
உன் கையில்தான்.

உன்னால்தான் எல்லாமே.
தீர்மானி... தேர்ந்தெடு...!

எழுதியவர் : அய்யா ரமேஷ் (22-Sep-17, 2:07 am)
பார்வை : 91

மேலே