மோகமும் மோக்ஷமும்

அழகிய பெண்ணொருத்தியை
கண்டபின்னே மனதில்
அவளை சிறைபிடித்து
அவள் வேண்டும் அவள் வேண்டும்
நிஜ வாழ்வில் என்று
பித்து பிடித்தார் போல்
அலைகின்றாய்-இது ஒரு
மயக்கம் ,மோகம் இது
என்று அறிந்திட ஏன் தயக்கம் ?
கோயிலுக்கு செல்கிறாய்
அங்கு கற்சிலையாய் உன்
முன்னே காட்சிதரும் இறைவனை
மனதில் இருத்தி அவன் பாதமே
துணை என்று பித்துக்கொள்வாய் எனில்
பிறவி பெருந்துயர் நீங்கிடுமே


இன்னும் ஏன் தயக்கம் !

(* மோக்ஷம்: தன்னை அறிதல், பரமனை உணர்தல் ,
உலகை நீத்தல் அல்ல)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Sep-17, 7:07 am)
பார்வை : 63

மேலே