வலி
வலியைப் புரிந்து கொள்
வாழ்க்கைப் புலப்படும்;
வலியைக் கடந்து செல்
நல்லின்பம் உன் வசப்படும்.
வலியைக் கடந்து நின்ற
கல் தான் கடவுளாகிறது;
வலியை உணர்ந்த பின் தான்
பொன்னும் அவனுக்கு அணியாகிறது;
பிரிவின் வலியறிந்தப் பூக்கள்தான்
அவனை அலங்கரிக்கின்றன;
தீச்சுடும் வலியறிந்த திரி தான்
தீபமாகிறது ஆலயத்தில்.
ஆம்...
வலிபடும் பொருளெல்லாம் பிறர்
வழிபடும் பொருளாகின்றன.
வாலிபக் கன்றுகாள்!
வலி விலக்கப்பாராதீர்....நீங்கள்
மிதிபடுபொருளாகிவிடுவீர்.
வலியுணர்ந்து வலி கடந்து செல்லுங்கள்- பலர்
உங்கள் வழி தேடி வருவார்கள்...
உங்களின் புகழ் பாட வருவார்கள்.
புரிந்துகொள்ளுங்கள்...
வெற்றிக்கு வித்திடும்
யுத்தக்களம் மட்டுமல்ல
பிறப்பிற்கு வித்திடும்
முத்தக்களமும் இரணமும்
வலியும் கலந்ததுதான்.
புரிந்து கொள்ளுங்கள்...
வலி இல்லாமல் வாழ்க்கையில்லை.