அனைவர்க்கும் தீபாவளி

அரசுதனில் உள்ளவர்கள்
ஆணவத்தை விட வேண்டும்!
தரமான ஆட்சியினைச்
சகலருக்கும் தர வேண்டும்!

ஓலைக்குடிசை வாழ்வு
உயர்நிலைக்கு வந்துவிடின்
நாளை விடியற்காலை
நமக்குனால் தீபாவளி!

கள்குடிப்பார் எல்லோரும்
கயமைத்தனம் கொண்டோரும்
நலமானதைப் பெற்றுவிடின்
நாட்டுக்கே தீபாவளி!

அன்பென்றும் அகம்புகுந்தால்
அனைவர்க்கும் தீபாவளி!
ஆதலால் அனைவருமே
அன்புகொள்வோம் வாருங்கள்!

எழுதியவர் : எம்.ஜெயராமசர்மா ...மெல்பேண (21-Oct-14, 5:41 pm)
பார்வை : 105

மேலே