தீபாவளி
தீபாவளி
-------------
இது ஒரு உன்னத குதுகூல திருநாள்
ஒளியில் ஊடுருவி நிற்கும் இறைவன்
ஒளியால் இருளாம் தீமைகள் அழிப்பது
விளக்கும் ஒரு விசேட நாள்- ஆம்
அன்றொரு நாள் த்வாபர யுகத்தில்
சத்யபமாவாய் அவதரித்தாள் பூமித்தாய்
மாமாயன் கண்ணனாம் நீலவண்ணனை
மணம் புரிந்தாள் பின்னே ஆண் மகவு ஒன்று ஈன்றாள்
நரகன் என்ற பெயர் பெற்ற அந்த சிசு
வளர்ந்து தவம் பல செய்து ஈசனிடம்
வரங்கள் பல பெற்று அசுரனாய் மாறி
தேவர்க்கும் மாந்தர்க்கும் எண்ணிலா
இடர்கள் விளைத்திட தேவர்கள் வேண்டிட
பூமித்தாய் சத்யபாமா போர்கோலம் பூண்டு
தன் மகன் நரகனை வதைத்தாள் - உயிர் பிரியும்
முன்னே நரகன் தாயை வேண்டினான்
"நான் அழியும் இந்நாள் இருளாம் தீமை
அழிந்து நன்மையாம் ஒளி பொங்கும்
திருநாளாய் தீபாவளி என்று நிலைத்து
மாந்தர் கொண்டாட வேண்டும் என்றான் "
இந்த வரம் தாயும் தந்திட-இன்று வரை
இது ஒரு பண்டிகை நாளாகிறது .
பின்னிரவு நீங்கி விடியல் வந்திட
இந்த மந்திர வேளையில்-கங்கையாம்
நீரினில் த்யானித்து நீராடி -பின்னர்
புதிய ஆடை உடுத்தி -நெற்றியில் நீறிட்டு
பரமனை மனதில் இட்டு வணங்கி
இனிய நாதஸ்வர ஓசை காதில் ஒலிக்க
கூடவே பட்டாசு ஓசை அதிர
அன்னை தந்த அதிரசம் ஆதி
பலகாரங்கள் உண்டு மகிழ்ந்து
காலை விடிந்த பின்னர்
உற்றார் உறவினரை கண்டிட செல்வோம்
அன்று இரவு இல்லம் தோரும்
மூளை முக்கெல்லாம் தீபங்கள்
ஏற்றிடுவோம் இருளாம் தீமைகள் நீங்க
வண்ண வண்ண மத்தாப்புக்கள்
வெடித்திடும் பட்டாசு இவைக்கொண்டு
ஒலியால் இருளை விரட்டிடுவோம்
மனதில் ஒளி பெருக்கி
அந்த தீபத்தால் தீபிகை
அன்னையை வணங்கி
மாயக்கண்ணனுடுன் அன்னையை சேர்த்து
ஒளியும் ஒளியுமாய் வணங்கிடுவோம்
மகிழ்ந்திடுவோம் மகிழவைப்பொம்
-----------------------

