மனிதன்
கீதையைப் படித்துவிட்டேன்
பலனை எதிர்பார்க்காமல்
இருக்க முடியவில்லை;
புத்தமும் படித்துவிட்டேன்
கொள்ளும் ஆசையதனை
விலக்க முடியவில்லை;
பைபிளையும் படித்துவிட்டேன்
மறு கன்னத்தைக் காட்ட
இன்னும் இயலவில்லை;
குர்ஆனையும் படித்துவிட்டேன்
இரப்போர்க்கு எல்லாம்
ஈய முடியவில்லை...
என் பொல்லா மனமது
இறக்கும் வரைக்கும்
நான் கொடும்மனிதனே...!