காளியப்பன் எசேக்கியல்- கருத்துகள்

நல்ல பல மூத்தோரின் கருத்துக்களைத் திறம்படத் திரட்டிக் ,கொடுத்துள்ளீர்கள். படிப்பவர்களுக்கு நல்ல சிந்தனைக்கான பயிற்சியினை இது நல்கும். எழுதியர் என்ற இடத்தில் கவிராஜ பண்டிதர் முதலானோர் என்றும் சேர்த்தது என்ற இடத்தில் வ.க. கன்னியப்பன் என்றும் குறிப்பிடுவதே சரியாகும்.

இதோ கவின் சாரலன் உங்களுக்காக ஒரு புத்தாண்டு வாழ்த்து....அறுசீர் விருத்தப் பா..
புத்தாண்டு நல்லாண்டாய் மலரட்டும், புதுமைகளைக் கொண்டுலகம் மகிழட்டும்;
மெத்தனங்கள் சுயநலங்கள் குறையட்டும்; மேன்மைதரும் படைப்புகளும் விளங்கட்டும்;
எத்தனங்கள் பல்லுயிர்கள் பேணட்டும்; இயற்கையுடன் நம்வாழ்வு சிறக்கட்டும்;
புத்தியுள்ள ஆட்சிபல தோன்றட்டும்; புவிவாழ்வில் மகிழ்சியுமே பொதுவாகட்டும்!
========+++++++++======== ,
எசேக்கியல்

அழகிய எண்ணமொன்றை விதைத்தது, உங்களின் இப்பதிவு,,,,,,,அதாவது
கோளனாய்த் தானே குறைசொல் லிலக்கியங்கள்
நாளுமே செய்கிறோம்! நல்லதாய் –தோளெடுத்(து)
என்செய்வோம் நன்மை? எவர்திருந்த? நாம்மாற
முன்செய்வோம் நல்ல முனைந்து!
====++++=====

கூடினார் முன்பின் குறைசொல்லி நிற்பாரை
நாடினார் இல்;அந் நயவுரையைத்-தேடிக்
கொடுத்தீர் மிகவருமை! கொண்டாடு கின்றோம்
எடுத்தவும் செய்கை இதை!
------+++++--------

04-04-2019 ....நல்ல கருத்தெடுத்துத் தந்துள்ளீர்கள் ஐயா..
வாளெடுத்தான் மாயும் வழியறிவான் வாட்கண்
தோளடுத்தான் தேயும் தொழிலறிவான் – மீளானே
கோளெடுப்பா னோடுமே கூடி யிருப்பவனே!
தாளெடுக்கு முன்னே தவிர்!
====+++++=====

ஓடிப் பறக்கும் ஒருகுருவிக் காகவோ
தேடிப் பொருள்சேர்ப்பீர்! தேவைகட்கே- ஆடிப்
படுத்தியும் பட்டும் பலசேர்த்தும் ஓர்நாள்
இடுகாட்டில் கூடவரல் என்?--------என்பதையே
அழகாகச் சொல்லியுள்ளீர் மெய்யரே!
நீண்ட நாட்களுக்குப் பின் வந்து படித்தஹில் மகிழ்ச்சி. தொடரட்டும்
உமது தமிழ்ச் சேவை..எந்நாளும் போல்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல அசைகள் அமையவில்லையே!

கன்னியப்பர் செய்த கவிநன்று; சியாமளாவின் குறள் பாக்களுக்கு ஒத்த வகையில் அருமையாக இயற்றப்பட்டுள்ளது ஒவ்வொரு கவியும். மிகுந்த பாராட்டுக்களைத் தங்களுக்கு உரித்தாக்குவதில் பெருமை கொள்கிறேன்.
உங்கள் கவனத்திற்கு இன்றொரு பதிவு செய்துள்ளேன்.

உருக்கமான படைப்பு. தாயின் மனக்குறையைத் தவறாது படம்பிடித்துக் காட்டுகிறது. படிப்பவர் மனம் தங்கள் வருத்தத்தை முற்றிலுமாக அறிவர். ஆறுதலைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முதல் பாட்டில் மூன்றாவது நான்காவது அடிகளை நான்காவது மூன்றாவது அடிகளாக மாற்றியமைக்கலாம் என்பது எனது கருத்து.

நல்ல கருத்துக்களுடைய வெண்பாக்கள்தான் எழுதியிருக்கிறீர்கள்; பரிசு கிடைத்திருக்கலாம்.. மற்றவர்களுடைய வெண்பாக்களையும் கொடுத்துள்ளதைப் பாராட்டுகின்றேன்.. அவற்றிற்கும் தங்களுடையதற்கு இடையே காணப்படும் ஆற்றொழுக்கு நடையினை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

நல்லாயிருக்கு வெண்பா..எல்லாவற்றிலும் ஒரு சொல்லே மாறி வருவதால் இதை ஒரு வெண்பா என்றே நான் கொள்கிறேன்.

கானலின் வீதியில் கண்காணும் காட்சியில்
மீனது வாழ்வதாய் மேவுத - லானதோர்
சாலகம் தோன்றிடும் சாகச மானது
போலவே காதலும் பார்..............அழகு, அருமை...!

'கானல் வலையிலே கண்டவொரு மீன்',காதல்
ஆன கதையும் அழகு!
நண்பர் வலை,மீண்டு நல்லபடி வந்தகதை
பின்பொரு நாள்,வரப்பார்ப் போம்!

அழகு அழகு ! மதுரையிலிருந்து சென்னை வந்ததற்கே ஒரு பயணக் கட்டுரையா..! நன்றாக எழுதுகிரிய்ர்கள்; இது போன்று உங்களின் பல பயணங்கள் பற்றியும் நீங்கள் எழுதலாம், அல்லது எழுதியிருந்தால் பதியலாமே ! பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்துக் ' குறும்பயணக் கட்டுரைகள் 'என்று நூலாக வெளியிட உதவும்.

பிடித்தொழித்தா..?...நல்லதோர் அம்மானைப் பாடல். வாழ்த்துக்கள்;
அன்னவனும் துகிலுரித்த தாகாதோ அம்மானை ??
பின்னொருநாள் திரௌபதிக்குத் துகிலீந்தா னம்மானை !! ---எதோ தட்டுகிறது. இருந்தாலும் நல்லதொரு குறிப்புள்ளது...

வழியில் வந்தவள்
வழிவழியாய் வந்த
குடும்பமெனும் கூட்டை
கலைக்காமல் பார்த்து கொள்ளுங்கள்------அருமை ;
கூடி வாழும் கலையை ஆதரிக்கும் கவிஞரின் கருத்து தொடரட்டும் சமூகம் பயனுறட்டும்!

வெடிகளுக்கு எதிராக 1998ல் நான் எழுதிய படைப்பு ஒன்றை வாசித்த எனது இளங்கலை/இளம் அறிவியல் பட்ட வகுப்பு/ பின்னர் முதுகலை, இளமுனைவர் பட்ட வகுப்பு மாணவர்களில் பலர் "இனிமேல் பட்டாசை கனவில்கூட தொடமாட்டோம்" என்னிடம் உறுதி அளித்து இன்றுவரை அந்த வாக்கைக் காப்பாற்றி வருகின்றனர்.
நல்லதொரு சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் கவிஞருக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் கவிப்பயணம் எழுத்தோடு சமூகத்திலும்!

மோதலுள்ள வார்த்தைகளும் முத்தங்களும் கொண்டு
=மூடிவரும் கடிதம் ;
கோதிவிடும் இதயத்தின் குளுகுளுப்பைக் கொன்று
=குப்பைக்குள் போட்டுவிட்ட கொடூரத்தொழில் நுட்பம் ---அழகிய கடிதம் எழுதும் திறனழிந்த கதை அழகோ அழகே !

உதவிக்கு வருவதில்லை ஆபத்திலும் !
வேடிக்கை பார்ப்பதற்கு கூட்டம்கூடுது .......இன்றைய பரிதாபமான நிலை!
திட்டமிட்டு செயலாற்றும் சதிகாரனை
தீயிட்டு கொளுத்துக கொலைகாரனை !----பொதுவாக மக்களிடம் காண வேண்டிய ரௌத்திரம் கவிஞனின் வெளிப்பாடாய்!
இனியாவது இதயங்களே முற்படுங்கள்
இதுபோல நிகழ்வுகளை தடுத்திடுங்கள் ! ------நியாயமான வேண்டுகோள் மக்களிடம் விழிப்புணர்வூட்டுவதாக!!


காளியப்பன் எசேக்கியல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே