காதல் தொடக்கத்தில் உரிமை, முடிவில்

ஒரு மின்னல் வந்து
உன்னை தாக்கலாம் - காதல் ஆகலாம்,
அதுவே இடியாய் வந்து
பெற்றவர்களிடம் இறங்க கூடாது.

என் வாழ்க்கையை நான் தானே
தீர்மானிக்க? என்பதில் ஒரு ஞாயம்
இருக்குமானால், மறுபக்கம்
பெற்றவர்களின் அனுபவத்திற்கு
ஈடு இணை ஏது?

பெண்களுக்கு
காதல் முற்றும்
பாதுகாப்பாகி விடுகிறது,
பெரும்பாலும்.
பையனைப்பெற்றவர்கள்
அனாதையாகிறார்கள்,
அநேகமாக.

இது காதல் திருமணங்களில் மட்டுமல்ல,
முறைப்படி நடக்கும்போது கூட
காதல், பரிவு என்பதின் எல்லை மீறி
இருந்த வந்த பாசத்தை
இடமில்லாது விரட்டி விடுகிறது,
எத்தனை கதைகள், அனுபவங்கள்.

ஒரு நாள் கூத்துக்காக மீசை வைப்பவர்கள்
யானை தன் மேல் மண்ணை வாரி
இறைத்துக்கொள்வதற்கு
ஈடாகிறார்கள்.!

லவ் பண்ணுங்கள்,
லைப்பை விட்டு விட்டு அல்ல,
இணக்கமாய் அணுகுங்கள்,
கோடு போடு முன் ரோடு போட முடியுமா
என்று பாருங்கள், அது உங்கள் கடமை.

வழியில் வந்தவள்
வழிவழியாய் வந்த
குடும்பமெனும் கூட்டை
கலைக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

இன்றைய காதல்
அவசியத்தை விட்டு விட்டு
அவசர கதியில் ஆண்டு கொண்டு இருக்குமாயின்
கலாச்சாரம் பின்னோக்கி செல்லும்,
ஆதி அந்தம் தெரியாமல் முறையின்றி
இங்கு மணம் செய்தால்
காலம் ஏசும்,
பார்ப்பவர் கண் கூசும்..!

எழுதியவர் : செல்வமணி (28-Aug-16, 11:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 77

மேலே