பாழாய்ப் போன பட்டாசு

பாழாய்ப் போன பட்டாசுகளை வெடித்து
காற்றின் தூய்மையைக் கெடுப்பது நியாயமா?
###ஃ
அஞ்சி அஞ்சி பட்டாசுத் திரியில் தீயை வைக்கும் வைக்கும் வீரர்களே
உமக்குப் பிடித்ததைக் கண்டு அஞ்சுவதேனோ?
@%
காதில் மூக்கில் வாயில் பட்டாசைச் சொருகி வெடிப்பீர்களா?
#@
கழுத்தில் ஒரு பட்டாசு சரத்தைச் சுற்றி திரியில் தீ வைப்பீர்களா?
@%@
தலையில் கிரீடம் போல் பட்டாசு சரங்களைக் கட்டிக் கொண்டு திரியில் தீ வைப்பீர்களா?
@#@@
வீரர்களாய் இருந்தாலும் பட்டாசு வெடிப்போர் அனைவரும்
அச்சத்தோடுதானே திரியில் தீ வைக்கிறீர்கள்!
@##
அச்சம் தருவது தீமை தருவதாகத்தானே இருக்கும்!
####
தீமை தரும் பொருள்கள் நமக்குத் தேவைதானா?
@###
எனக்கு வயது 65. என் தந்தை இயற்கை ஆர்வலர். அவர் உயிரோடு இருந்தால் அவருக்கு அறிஞர் அண்ணாவின் வயது.
####
நான் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது அவர் சொன்னார்"பட்டாசு மத்தாப்பு போன்றவற்றைக் கொளுத்துவது "இயற்கையை அழிக்கும் செயல்" என்றார். நான் அன்று முதல் பாழாய்ப் போன பட்டாசு சனியனை நான் தொடுவதில்லை. வெறுக்கிறேன்.
####
பட்டாசு வெடித்து உயிரினங்களை அச்சுறுத்துவோரையும் வெறுக்கிறேன்.
@%@
என் மகன், மகள் மற்றும் என் இல்லத்தரசியும் பட்டாசு சனியன்களை வெறுப்பவர்கள். வெடிகளுக்கு எதிராக 1998ல் நான் எழுதிய படைப்பு ஒன்றை வாசித்த எனது இளங்கலை/இளம் அறிவியல் பட்ட வகுப்பு/ பின்னர் முதுகலை, இளமுனைவர் & முனைவர் பட்ட வகுப்பு மாணவர்களில் பலர் "இனிமேல் பட்டாசை கனவில்கூட தொடமாட்டோம்" என்று என்னிடம் உறுதி அளித்து இன்றுவரை அந்த வாக்கைக் காப்பாற்றி வருகின்றனர்.
@##
அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
@###
எழுத்து.காம் படைப்பாளிகளுக்கு எனது வேண்டுகோள்: காசைக் கரியாக்காமல் ஏழை மாணவர்களுக்கு உதவிடுங்கள். நன்றி.

எழுதியவர் : மலர் (29-Aug-16, 1:21 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே