இலையுதிர் காலம்

மேகமாய் தேடி அலைந்து
வெள்ளி நிலவொன்றைக் கண்டேன்...
வெயிலில் உருகாமல் இருக்க
விழி இமைகளால் அதனை மூடினேன்...
என் இமைகள் கருகிப் போனதே...
இரு விழிகளும் தீயாய் எரியுதே......

மேகமாய்......

நாணல் போல நானும்
புயல் காற்றில் வளைந்து நின்றேன்...
காதல் சோகம் எனைத் தீண்ட
தென்றல் காற்றில் சாய்ந்துப் போனேன்......


உதிரம் சொட்டும் இதயக் கூட்டில்
காதல் மூச்சை நிரப்பி வைத்தேன்...
உன் வாய் மொழியும் வார்த்தை
அம்புகள் கிழிக்கவே உணர்வின்றி உறைந்தேன்......


வளர் பிறை ஒன்று இல்லையென்றால்
வானத்தில் நிலவும் உதிக்காது...
என்னுடன் நீயும் இல்லையென்றால்
உயிர் மூச்சும் உடலில் நிலைக்காதே......

மேகமாய்......

கண்ணாடி பொம்மை போல நானும்
உன்னைப் பத்திரமாய் காத்து வந்தேன்...
கை நழுவி செல்லும் போதே
கண்ணாடித் துண்டுகளாய் மனம் உடைந்தேன்......


கனவுகள் கலைந்துப் போகலாம்
நினைவை நெஞ்சம் மறப்பதில்லை...
நீ என்னைப் பிரிந்தப் பின்னும்
நான் உன்னை மறக்க நினைத்ததில்லை......


இலைகள் உதிர்ந்துப் போனாலும்
மரம் மண்ணில் வீழ்ந்துப் போவதில்லை...
சோகங்களே வந்து சேர்ந்தாலும்
என் காதல் சோர்ந்துப் போவதில்லை......

மேகமாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (30-May-16, 11:23 am)
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 268

மேலே