நீர் இல்லாது மீன்கள் நான்

என் நெஞ்சம் உடைந்துப் போகுதே
நீ என் கண்களில் விழுந்ததாலே...
கண்ணீர் கூட இரத்தம் ஆனதே
உள்ளிருந்து நீ கசக்கி பிழிவதாலே......


கைக்கோர்த்து திரிந்தோம்...
கதைப் பேசி அலைந்தோம்...
அதிகாலை நேரம் வரையிலும்...
அகல் விளக்குகளாய் விழிகள் திறந்தோம்...
ஆகாயத்தில் விண்மீன்களாய் மலர்ந்தோம்...
ஆனால் ஏனோயின்றுப் பிரிந்தோமே......


பாலைவத்தில் நான் கள்ளியானாலும்
அதில் பூத்தப் பூ நீதானே...
வெயிலில் காய்ந்து நான் சுள்ளியானாலும்
இதழ் சுருங்காது உனைக் காத்தேனே......


உளிகள் தாங்காது சிலையாக
நினைக்கும் சிறு கல்லாய்
வலிகள் தாங்காது வதனம் சுழித்து
வஞ்சிக் கொடியே நீ போனதென்ன?......


வாசல் தேடி வந்தப் பிறகும்
வாய்ப் பேச மறுத்தாயே...
வான் மழையில் நனைந்துக் கொண்டே
மௌனத்தால் மனதில் குடை விரித்தாயே......


பறந்து செல்லும் பறவையின் சிறகுகளாய்
என்னோடு தான் நீயிருந்தாய்...
பாதி இரவில் கலைந்தக் கனவாய்
நீ விலகி சென்றதேன்......


விரும்பத் தகாத வினை ஏதும்
நான் செய்து விட்டேனா?...
சரீரம் போர்த்தும் சருமம் போல்
பிணைந்த உன்னை மறந்தேனா?......


தழலில் இறங்கவும் தயாராய் இருக்கிறேன்
எனை வெறுத்து விடைதே...
நீர் இல்லாது துடிக்கும் மீன்களாய்
நீயில்லாது உயிர் துடிக்கிறேனே......

எழுதியவர் : இதயம் விஜய் (30-May-16, 11:34 am)
பார்வை : 316

மேலே