காதல் உயில்

இளநீராய் உனை
இதயத்தில் பொத்தி வைச்சேன்
உடைத்து நீயும் வெளி வந்தாய்......


துருவிய தேங்காய் பூவாய்
அம்மியில் அரையுதே என் மனசு
கொதிக்கும் குழம்பில் கரையுதே
என் உசுரு......


அடுப்பில் நீ தீ மூட்ட
அடியில் வைக்கும் விறகாய்
உள் உணர்வுகள் உன்னால் எரியுதே......


உனைத் தாங்கி நின்றேன்
உள்ளங்கை இரேகைகளாய்...
உளியாக உன் சொற்கள்
உதிரம் கசிகிறேனே......


மழைத் துளிகள்
செங்குருதியாய் பூமி நனைகின்றதே...
மனதின் துளி இடத்தையும் துடைத்து
எனை நீதான் துரத்தி விட்டாயே......


இதோ... என் காதல் உயில்
உணர்ந்துப் பார்
உள்ளம் முழுவதும் நீதான் உயிர்......

எழுதியவர் : இதயம் விஜய் (30-May-16, 11:38 am)
Tanglish : kaadhal uyil
பார்வை : 422

மேலே