யாப்பணிவகுப்பு-௦௨ விருத்தங்கள்

>>பாவலர் குழுமத்தினருக்கு
குறளடி கொண்டு வந்து, சிந்தடி யாய்த்த வழ்ந்து
நெறிமுறை அளந்து கேட்டு நிமிர்ந்தள படியெ டுத்து
மறவனாய் நெடிலக்குள் மயக்கமில் நடைந டந்து
சிறந்தவ ராவர், கூடும் செந்தமிழ்ச் சோலைச் சான்றோர்
++
>>>பாட்டரசர் கி.பாரதிதாசன், பிரன்சு அவர்களுக்கு

தேனூறும் விருத்தங்கள் தெளிவாய்ப் பாடித்
தித்திக்கத் தந்தவரைச் சிவனைப் போற்றி
ஊனூறும் செந்தமிழின் உணர்வைக் கூட்டி
உளமாறப் பாடியஎம் பாட்டின் மன்னர்
வானேறி நிற்கின்ற கவியின் உள்ளம்
வழுத்துகிறேன் போற்றுகிறேன் சிவனைப் பெற்றோர்
மானேறி நிற்கின்ற மகிழ்வைப் பாடி
மனத்தேறி நிற்கின்றீர் வாழ்க! வாழ்க!
++
>>> திருமிகு கோ.சிவப்பிரகாசம் அவர்களுக்கு
அருஞ்செயலை ஆற்றிவரும் சிவனார் பாதம்
+++அடியேனும் போற்றுகிறேன் பணிகின் றேனே!

சிவன்புகழாய் ஒளியேந்தி செந்தமிழின் நடைகூட்டி
நவநவமாய்ப் பாவெழுதும் நல்லவரை ஏத்துகிறேன்!
தவமிவராய்ப் பெற்றவரைத் தமிழ்போற்ற நிற்பதனால்
சிவப்பிரகா சர்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்

வாழ்க! வாழ்க!
++
>>திரு மெய்யன் நடராஜனுக்கு..
நூதனமாய் சாய்க்கவரும் நோய்க ளெல்லாம்
நுண்கிருமி ஆராய்ச்சி செய்வோ ராலே
சாதனையாய் எடுத்துவரும் சங்க டங்கள்!
சாப்பாட்டிற் கெனமரபு சார்ந்த தாகச்
சோதனையாய் ஏறெடுத்தச் சுயமு யற்சி;
சூழ்நிலையை மாற்றிவரும் கொலைமு யற்சி;
வேதனையோ தடம்மாறும் விஞ்ஞா னத்தால்
விரும்பியேநாம் ‘பஸ்மாசு ரன்’,ஆ னோமோ?
++
நெஞ்சிலே வஞ்சம் தூக்கி நேரிலே சிரிப்பைக் காட்டி
பஞ்சினை அணைக்கும் தீபோல் பாசமும் காட்டி னாரே!
துஞ்சுவா ரென்ற றிந்தும் தூரத்து நாட்டி னுள்ளும்
கொஞ்சமும் இரக்க மின்றிக் கொரொனாவைப் பரப்பி னாரே!
++
வண்ணங்கள் மாறும் வாழ்க்கை வளங்களோ மாற வேண்டாம்;
எண்ணங்கள் மாறும் அன்பின் இதயமோ மாற வேண்டாம்;
கண்முனே உருவம் மாறக் காண்பதில் உண்மை நிற்கப்
பண்பிலே சிறப்புக் குன்றா படைப்புகள் பெருகி டட்டும்!

நினைவுகள் வந்து போக நிழற்படம் மனித ராகிக்
கனவெனக் கடந்த காலக் காட்சியாய் மாற வேண்டாம்;
புனைவுகள் இல்லா வாழ்க்கை புவியினில் நிலைக்கும் வண்ணம்
தினவுகள் புதுமை கூட்டத் தீமைகள் தோன்ற வேண்டாம்!

கொஞ்சிடும் சொற்கள் கேட்கக் குழந்தையும் மகிழ்ச்சி காட்டும்;
நெஞ்சிலே உள்ள அன்பை நினைத்ததன் அழுகை தீரும்;
மஞ்சிலே தவழும் நீரால் மண்ணிலே குளிச்சி சேரும்;
விஞ்சிடும் வேட்கை மாந்தர் வீழ்ச்சியை நடத்திக் காட்டும்!

நெஞ்சி லோடும் நினைவு காட்டும் நிழற்ப டங்கள் பற்பல
அஞ்சும் வண்ணம் அவையி ருப்பின் அதிலே துன்பம் தீருமோ?
வஞ்ச மாடும் நெஞ்சி னார்க்கு வாழ்வி லேதும் மிஞ்சுமோ?
விஞ்சு மாந்தர் ஞான வேட்கை வெருட்சி யூட்டல் நல்லதோ?

எசேக்கியல்

வெற்றிமேல் வெற்றி பெற்றும் வீழ்ந்தவன் ஹிட்லர் என்பார்!
பற்றுமேல் பற்று வைத்தே பனிபொழி உருஷ்யா மீது
முற்றுகை இடநி னைத்தான் முன்னேறு வதாகச் சென்று
முற்றுமாய் அழிந்து போனான் மூளாசைத் தீயில் தானே!
++
விருத்தப்பா எழுத வேண்டி விரும்பியே வந்தேன் சொற்கள்
பொருத்திபா எழுதிப் பார்த்தேன் சொற்பமே படிக்க வந்தோர்!
வருத்தப்பா எழுதி விட்டு வழியினை மாற்றிக் கொண்டேன்
விருத்திப்பா விளையு மென்றே விதைக்கிறேன் வயலில் இன்றே!

+++====++++

நெஞ்சி லன்பைத் தேக்கி வைக்க
நேரு மின்னல் தீருமோ?
கஞ்சி மூடி வைத்து விட்ட
காவி ரிக்குள் ஓடுமோ?
அஞ்சி வாழும் வாழ்க்கை மீதில்
ஆசை வைத்து வாழ்வமோ?
மிஞ்சு மன்னம் கேட்டு நிற்க
மீறும் ஆசை நம்மதோ?

நெஞ்சி லன்பைப் பூட்டி வைத்த
நீண்ட சொற்கள் கேட்கவோ?
கொஞ்சு கின்ற பாட்டி லெந்தக்
குழவி தூங்க லாகுமோ?
அஞ்சி வாழு கின்ற பேரே
அமைதி கொண்டு வாழ்வரோ?
இஞ்சி போல வாழ்ந்து புளித்த
ஏப்பம் நீக்க வாருமே!

பஞ்சி லிட்ட நெருப்பை யாரும்
பற்றி டாதே என்பதோ?
நஞ்சை யொத்த களைகள் தம்மை
நட்டுப் பயிரும் செய்வதோ?
கெஞ்சி வாழல் விடுத லையாய்க்
கேட்ட தென்றும் ஆகுமோ?
குஞ்சி விட்டே சுதந்தி ரத்தைக்
கொண்ட முடியும் நீயடா!

++++====++++
நெஞ்சிலே அன்பைத் தேக்க நேருமின் னல்கள் போமோ?
அஞ்சியே வாழு வோர்க்கே ஆளுகை இன்ப மாமோ?
மிஞ்சிய அன்னங் கேட்போர் மேலெழும் பிடலும் ஆமோ?
விஞ்சிடும் அன்பு கொண்டோர் வீழ்ந்தவர் பொறுக்கப் போமோ?

நெஞ்சில் அன்பும் இல்லையெனின் நிலத்தில் உயிர்களும் வாழ்ந்திடுமோ?
அஞ்சி வாழ வேண்டாம்தான் அதற்காய்ப் பிறவுயிர் கொல்லுவதோ?
கொஞ்ச மேனும் இரக்கமிலா கொடியோர் சோதனை தீருமெனில்
விஞ்சு மன்பில் புதுவிடியல் விரிக்கும் மாந்தரும் வாராரோ?
எசேக்கியல்

எழுதியவர் : காளியப்பன் (25-Jun-20, 8:21 pm)
பார்வை : 48

மேலே