கவிதை வேட்டை

கொடிய கவிதைகள் வாழும் அடர்ந்த காட்டினிலே..
தன்னந்தனியே நான்.. என்னுடன் ஒரு அமாவாசை..
கவிதைகள் பொல்லாதவை, பசியெடுத்தால் மாமிசம் உண்டு இரத்தம் குடிப்பவை..

ஓ.. சொல்ல மறந்தேன்.. நான் ஒரு கவிதை வேட்டையன்..
உயிருடன் கவிதைகளை பிடிப்பதில் தேர்ந்தவன்.. வீராதி வீரன்..

ஆ.. நான் இன்னும் வித்தைக்காரன், அல்லது கூத்தாடி..
நான் பிடிக்கும் கவிதைகளை கூண்டில் அடைப்பேன்..
விகாரமான கண்களைப் பிரட்டி அகோரமாய் சிரிக்கும் கவிதைகளைக் காட்டி பிழைக்கிறேன்..
ரசிப்பார்கள்.. ஆபத்து என்று தெரிந்தும் கவிதைகளுடன் விளையாடத் துடிப்பார்கள்..

ஆனால் கவிதைகளை எனக்கு பிடிக்காது.. அவை எப்போதும் பப்பரப்பே என்று முழித்துக்கொண்டிருப்பதால்..

உஷ்... அமைதி.. பிடரிக்கு பின்னால் இலைகளின் சரசரப்பு..
நான் அசைவற்று திரும்புவதில் தேர்ந்தவன்..
மரண வாசம் கமக்கும் உறுமலில் தெரிந்தது நன்கு பசித்திருந்த கவிதை என்று..

ஒளிரும் இரண்டு செங்கண்களைத் தவிர மீதமும் இருள்..
ஆனாலும் அமாவாசை எனக்கு தோழன்.. சுதாகரித்து, நிதானத்துக்கு காத்திருக்காமல் தாக்கினேன்..
என் தாக்குதல் அசுரத்தனமாய் இருந்தது..

கால் முறிந்தது கூட அறியாமல் கவிதை நடனமாடுகிறது.. அரக்கத்தனமாய் என்னைப் பார்த்து சிரிக்கிறது..

எழுதியவர் : றிகாஸ் (24-Feb-18, 3:12 am)
சேர்த்தது : றிகாஸ்
Tanglish : kavithai vetai
பார்வை : 204

மேலே