தலை எழுத்துக்கள்

எம்.எப்.எம். றிகாஸ்

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பளிங்குக்குளியலறையில் நீர்க்குழாயில் இருந்து நீர்
சொட்டிக்கொண் டிருந்தது. அந்த குளிர்ந்த நீரில் டேவிட் தனது முகத்தைக்
கழுவிக்கொண்டிருந்தான். அவனுக்குள் இருந்த சோம் பேறித்தன்மையும் நித்திரை மயக்கமும்
எங்கோ ஓடி மறைந்து விட்டன. ஆனாலும் அவனுடய உடல் ஒருவித சோர்வை உணர்ந் து
கொண்டிருந்தது. பளிங்குபோல் தெளிவாய் இருந் த கண்ணாடியில் முகத் தை நிமிர்ந்து பார்த்தான்.
அவனுடைய கண்கள் நன்றாவே சிவந்து இருந்தது.
“சே... நைட் அடிச் ச சரக் கு போத இன்னும் கண்ணுல தெரியுது...”
இப்போது அவனுடய நினைவுகள் இரவு அவன் சென்றிருந்த இரவுக்களியாட்ட விடுதிப்பக்கம்
நகர்ந்தது...
அந்த விடுதி மது, மாது, சூது என்று களைகட் டியிருந்தது. பெரும் புள் ளிகளால் நிறைந்திருந்த
அந்த விடுதியில் பாட்டுக் கும் கூத்துக்கம் இடையே ஆண் பெண் என்ற அங ;கவேறு பாடுகள் மட்டும்
தெளிவாய்த் தெரிந்தது. நேற்று அவனுடைய பிறந்தநாள். அங்கு அவன் அவனுடய
நண்பர்களுக்காக விருந் து ஒழுங்கு செய்திருந்தான்.
நிச்சயாமாக அந்த இரவு இந்த வருடத்தில் ஒரு பூரிப்பை அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தது. அது
அவனுடய பிறந்தநாள் என்பதைத்தாண்டி அவனுக்குள் புதுவித அனுபவமாய் இருந் தது.
எத்தனையோ களியாட்டங்கள், மது, மாது என் று பார்த்துவிட்டான் ஆனால் நேற்றய இரவின்
நினைவுகள் அவனுடய உள்ளத்து உணர்வுகளை பொங்கவைத்தது. இத்தனைக்கும் காரணம்
அந்தப்பெண்...
அவளுடைய பெயர் கூட அவனுக்கு தெரியவில்லை. போதை மயக்கத்தின் உச்சத்தில் அவனுக்கு
அவளிடம் தேவைப்பட்டது பெயர் அல்ல...
“சீ வாஸ் வெறி பியூட்டிபுள் என்ட் வெறி எக்சைட்டிங்... சம்திங் டிபரன்ட்...”
அவன் உள்ளத்தால் அவளைப்;புகழ்து கொண்டவாறு எண்ணங்களை நீரினால்
கழுவிக்கொண்டிருந்தான். அவனுடைய மூக்கு நுனியில் இருந்து நீர்த்துளிகள் சொட்டிக்
கொண்டிருந்தது.
திடீரென்று அறையின் அழைப்பு மணி ஒலித்து அவனுடைய கவனத்தை திருப்பியது.
“யெஸ் வெயிட்... இப்போ வாறன்...”
தொங்க போட்டிருந்த வெண்நிறத் துவாயை எடுத்து முகத்தை ஒத்தியவாறு முன் கதவருகே
சென்று கதவைத்திறந்தான். அங்கு யாரும் இருக்கவில்லை.; தலையை வெளியே எட்டி
நடைகூடத்தின் இரண்டு பக்கங்களையும் பார்த்தான்.
அங்கு யாரும் வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை. யாரும் வந் து
கதவைத்தட்டியிருந்தாலும் நிச்சயமாக நடைகூடத் தை விட்டு தாண்டியிருக் க முடியாது.

“என்னாச்சு?... யாரா இருக்கும் ஒருவேளை பிரம் மயா இருக்குமோ? சே சே.. நோ சான்ஸ் ஐயம்
சுவர் வித் தட் கோலிங் பெல்.”
கதவை மூடிவிட்டு மீண்டும் குளியலறைக்குள் சென்று குளிப்பதற்காய் ஆயத்தமானான். மீண்டும்
அதே அழைப்பு மணி... அவனுக்குள் எழுந்த சந்தேகம் அவனது காதுகளை ஒரு முறை
உற்றுகேட்க வைத்தது. “யெஸ் கோலிங்பெல்” உறுதிப்படுத்திக்கொண்டான். விரைவாக
கதவினருகே சென்று கதவைத்திறந்தான் மீண்டும் ஏமாற்றமே அவனுக்கு மிஞ்சியது.
அங்கு யாரும் இல்லை. நடைகூடத்துக்கு நகர்ந்து சுற்றும் முற் றும் பார்த்தான். யாரும்
வந்ததற்கான ஆதாரம் இல்லை.
“பக்கத்து ரூம் அல்லது முன் ரூம் யாராவது பண்ணியிருப்பாங்களோ?... வட் த ஹெல் இஸ்
கொயிங் ஹியர்?...”
கோபத்துடன் கதவைச்சாத்தினான். அப்போது கால்களில் ஏதோ ஒரு காகித அட்டை மிதிபட்டது.
“ஏதோ கிரீடிங் கார் ட் போல இருக்கு...” அருகில் அழகிய ரோஜா மலர் அழகாக
சிரித்துக்கொண்டிருந்தது. அதில் படிந்திருந்த நீர்த்துளிகள் மேலும் அழகூட்டின. கைகளில்
வாழ்த்துஅட்டையையும் ரோஜா மலரையும் எடுத்துக்கொண்டான். அந்த வாழ்த்து அட்டையில்
“HAPPY BIRTH DAY TO YOU MY DEAR” என்று எழுதப்பட்டிருந்தது.
அவனுக்குள் ஒரு சந்தோசம் மெதுவாக முளைத்தது.
“யாரா இருக்கும் ப்ரியா?... அவள் நேரடியாவே விஸ் பண்ணிட்டாளே... ஸ்ருதி?... நோ நோ ச்சான்சே இல்ல... வேற
யாரா இருக்கும்” அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த மேசை மீது வைத்து விட்டு
குளிப்பதற்காய் சென்றுவிட்டான்.
“யார் கார் ட் அனுப்பியிருப்பா?... கோலிங் பெல் கேட்டுச்சி ஆனா யாருமில்லையே?..” எல்லாமே
கேள்விக்குறியாய் அவனை நனைத்தது. ஒருவாறாக அவசரமாக குளித்துவிட்டு வெளியே வந்தான்.
சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த கடிகாரம் தனது முட்களை எட்டு மணியை நோக்கி நகர்த்தி விட்டு
ஒலிக்கதொடங்கியது. கட்டிலில் மேல் போர்வைக்கு இடுக்கில் இருந்து தொலைபேசியும் சிணுங்கத்
தொடங்கியது. தொலைபேசியை கையில் எடுத்தான். ரம்யா என்ற பெயரில் இருந்து அழைப்பு...
“யெஸ் சொல்லு ரம்யா?”
“சேர் டைம் எயிட் பாஸாயிட்டு, ஒபிஸுக்கு லேட்டாயிட்டு அந்த கொன்ரக்ட் பார்ட் டி நைனுக்கு
வந்துடுவாங்க சேர், யு மஸ்ட் பி ஹியர்”
“இட்ஸ் ஒகே ரம்யா, ஐயம் ஒன் த வே”
“தங்ஸ் சேர்”
தொலைபேசியை வைத்துவிட்டு அவசர அவசரமாக ஆயத்தமானான். அறையைப்பூட்டிவிட்டு
லிப்ட்டுக்குள் சென்று புகுந்து கொண்டான். லிப் ட் அவனைத் தரைக்கு கூட்டிக்கொண்டு சென்றது.
கீழே அவனுக்காக அவனுடைய கார் சாரதியுடன் தயாராக இருந்தது. காரில் ஏறிக்கொண்டான்.
ஒரே வேகத்தில் கார் பிரமாண்டமான ஒரு கட்டிடத்தின் முன்னால் சென்று நிறுத்தப்பட்டது.

“ராஜிவ் கொன்ஸ்ரக்ஸன் பிரைவட் லிமிடட்” இது டேவிடின் அப்பா ராஜிவ் ரங்கநாதன் முப்பது
வருடமாக நிருவகித்து வந்த சொந்தக்கம்பனி. நாடு பூராகவும் கிளைபரப்பி வருடத்தில் லாபம்
மட்டும் கோடிக்கணக்கில் புரளுகின்ற ஒரு பாரிய கம்பனியாக இருந்தது. ராஜிவ் ரங்கநாதன்
இறந்த பின்னர் டேவிட் நிருவாக இயக்குனராக பொறுப்பேற்று ஒரு வருடமாகிறது. இப்போது
டேவிட்டுக்கு இருபத்தேழு வயதுதான் ஆகிறது. இந்த வயதில் அவனால் சுமக்கக்கூடிய
சுமையல்ல இந்தக்கம்பனி, ஆனாலும் இது அவனுக்கு கிடைத்த பாக்கியம்.
இருந்தாலும் முதல்போல கம்பனியின் நிலைமை அவ்வளவாக போற்றக்கூடியதாக தற்போது
இல்லை என்றுதான் கூற வேண்டும். என்னசெய்வது அப்பன் சொத்து, அனுபவப்பற்றாக்குறை
இவை அவனுடைய கம்பனியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க
வேண்டும். பார்ட்டிகள், பெண்தோழிகள், ஹோட்டல், இரவுவிடுதி என்ற அவனுடைய நேர
அட்டவணையில் கம்பனிக்கென்று ஒரு இடம் பெரும் கடினமாகத்தான் இருந்தது.
விரைவாக காரில் இருந்து இறங்கி கம்பனிக்குள் நுழைந்தான். பலத்த வரவேற்பு காலை
வணக்கங்கள் மட்டும் எண்ணிலடங்கவில்லை. அவனுடைய அலுவலக அறைக்குள் நுழைந்து
அவனுக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
“எக்ஸ் கியூஸ் மி சேர்” அவனுடைய உதவியாளர் ரம்யாவின் குரல்...
“யெஸ் கம்இன்”
“சேர் நேற்று உங்கட பேர்த் டேதானே... மை விஸ்ஸஸ்...”
“தங்ஸ் ரம்யா”
“சொறி சேர் இன்றைக்கு வாறதா இருந்த அந்த கொன்ஸ்ரக்ஸன் பார்டி அவங்க புரஜக்ட்ட வேற
கம்பனிக்கு மாத்திட்டாங்களாம்... இப்பதான் ஈ-மெயில் வந்திருக்கு”
“வட்?... ஏன் மாத்திட்டாங்கனு தெரியுமா” ஏமாற்றம் கலந்த வார்தைகளில் கேட்டான்.
“தெரியல சேர்”
இதன் மூலம் பாரிய இலாபத்தை எதிர்பார்த்திருந்தான். பெரியதொரு ஏமாற்றம் இதனை சற்றும்
அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுடைய உள்ளத்தில் கவலையின் மெல்லிய சாயல்
ஆட்கொண்டது. லேசான தலைவலியை அவனுடய தலை உணர்ந்தது.
“ரம்யா, ஐ நீட் டு கெட் சம் ரெஸ்ட், இன்னிக்கு லீவ் எடுக்கிறன்... பார்த்துக்க”
விரைவாக கம்பனியை விட்டு வெளியேறி காரில் ஏறிக்கொண்டு அவன் தங்கியிருக்கும்
ஹோட் டலை நோக்கி பறந்தான். தலைவலி அதிகமாகிக்கொண் டேயிருந்தது. உடல் ஒருவித
சோர்வையம் வலியையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. விரைவாக ஹோட்டலை நோக்கி கார்
பறந்தது.
டேவிட் தனது அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தான். அவனுக்கு காலையில் கிடைத்த வாழ்த்து
அட்டையின் நினைவுகளில் மேசையில் இருந்த வாழ்த்து அட்டையை நோக்கினான். அவனுக்கு
ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. இரத்தத்துளிகள் வாழ்த்து அட்டையின் மீது தெளிக்கப்பட்டவாறு
சுருண்டு கிடந்தது. அருகில் இருந்த ரோஜா மலர் காய்ந்து சருகுகள் சிதறி மேசை மீ து
பரவிக்காணப்பட்டது. அவனது உள்ளம் கேள்விக்குறிகளால் நிரம்பியது. பயத்தினால்
பெருமூச்சுகள் அவனை ஆட்கொண்டன. அந்த அறைக்குள் இருந்து மூக்கைப் பிடுங்கும் அளவு
ஒருவித துர்வாடை பரவ ஆரம்பித்தது...
காலையில் ஒலித்த அழைப்பு மணிகளின் ஞாபகங்கள் வேறு அவனுடய பயத்தை பல
மடங்காக்கியது. அவனுடைய அறைக்குள் யாரும் வருவதற்கான எந்தவித வழியும்
இருக்கவில்லை. அவனுடைய தலை வலி மேலும் பல மடங்குளால் பெருகியது. கண்களின்
பார்வை மங்கலானது. வீசிக்கொண்டிருந்த துர் வாடையில் அவனுடைய மூச்சுத்திணறியது. பல
முறை இடைவிடாத தும்மல் ஒவ்வொரு தும்மலுக் கும் வாயில் இருந்து இரத்தம் அறை முழுவதும்
சிதறித் தெறித்தது. அவனுக்கு பயத்தைத்தவிர வேறு ஒன்றுமே புரியவில்லை...
பயத்தின் அகோரத்தினால் நடுங்கிய கைகளோடு எழுந்து வாழ்த்து அட்டையை நோக்கி
மெதுவாக கால்களை நகர்த்தினான். அவனுக் குப்பின்னால் பயங்கர கருண்ட முரட்டு உருவம்
விகாரமடைந்த அதன் கைகளை அவனுடய கழுத்தை நோக்கி நீட் டியவாறு கம்பீர நடையுடன்
அவனை நெருங்கியது. டேவிட்டின் கழுத்து இப் பொழுது அந்த உருவத்தின் முரட்டுக்கைகளுக்கு
இடையே நசுங்கியது. அவன் கதிகலங்கினான்... கதறினான்... கண்கள் புடைத்தது... தொண்டை
அடைத்து இருமலை ஏற்படுத்தியது. இருமலின்போது வாய்க்குள் இருந்து இரத்தம் கக்கியது.
அந்த உருவம் அவனைத்தாறுமாறாக தாக்கியது. வலிதாங்க முடியவில்லை. சிறிது
நேரப்போராட்டத்திற்குப்பின் கட்டிலில் மயங்கி விழுந்தான்...
திடீரென்று அவனுடைய கண்கள் மீண்டும் திறந்தது. திடுக்கிட்டவாறு எழும்பினான். பயத்தின்
அகோரம் அவனது கண்களை கவ்விப்பிடித்துக் கொண்டிருந்தது. அவனது தோற்றம் இது
அவன்தான் என்பதை மறந்திருந்தது. கால்கள் கொக்கின் காலைப்போல் வற்றிப்போன நிலையில்
சூம்பிப்போய், மார்பில் எலும்புகள் வெளித்தள்ளியவாறு தோலால் போர் த்தப்பட்டு, கைகளுக்கு
பதிலாக சூம்பிய எலும்புகள் பிரதியிடப்பட்ட நிலையில், கன்னங்கள் உட்தள்ளி, கண்கள்
புடைத்து பரிதாபகரமான தோற்றத்தில் டேவிட் கட்டிலில் அநாதரவாக படுத்துக்கிடந்தான்.
பார்பதற்கு கூட அருகில் யாரும் இல்லை. அவனால் யூகிக்க முடியாதளவு அவனுடைய நிலைமை
காணப்பட்டது.
சுற்றும் முற்றும் பார்த்து முழித்தான்... மீண்டும் அதே கறுப்பு உருவம்... ஒரு மூலையில் அவனை
முறைத்துப் பார்த்தவாறு சிவந்த கண்களுடன் உறுமிக்கொண்டிருந்தது.
டேவிட் பயத்தின் படுகுழியில் தள்ளப்பட்டான். மூச்சின்வேகம் அவனையே மீறியது...
அந்த உருவம் எழுந்து அவனை நோக்கி வந்தது...
அவனுடைய வலுவிழந்த இதயம் வலித்தது... உடல் நடுங்கியது... கண்கள் புடைத்து மேலும்
அவனால் ஒரு மூச்சை இழுப்பதற்கு கூட முடியவில்லை. மூச்சு நின்றுவிட்டது... அப்படியே
கட்டிலில் அவனுடைய உயிர் கண்களைத்திறந்தவாறே மூர்ச்சையானது...
அந்த விகாரமான கருண்ட உருவம் அதனது கைகளை மேலுயர்த்தி டேவிட்டின் கண்களை
மெதுவாக மூடிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தது...
டேவிட்டின் தலைக்கு அருகில் இருந்த சுவரில் வழிந்தோடும் இரத்தத்தால் “HIV” என்று
கிறுக்கப்பட்டிருந்தது...
இவைதான் இறைவன் எமன் மூலமாக அவனுக்காக எழுதிய தலையெழுத்துக்களாக
இருக்கமோ....???

எழுதியவர் : எம்.எப்.எம். றிகாஸ் (3-Dec-14, 9:06 pm)
சேர்த்தது : றிகாஸ்
Tanglish : thalai eluthukkal
பார்வை : 1099

மேலே