அன்பென்னும் மழை -13 -தேவி

(முன் கதை சுருக்கம்: அடுத்த நாள் வீட்டுக்கு வர சொல்லி வருநின் அம்மா வர்ஷுவையும், அவள் அம்மாவையும் அழைத்திருந்தார் )


காலை 10 மணி சுமாருக்கு வர்ஷிதா தன் அம்மாவை காரில் அழைத்து கொண்டு வருநின் வீட்டுக்கு சென்றாள். அவர்கள் வருகைக்காக காத்திருந்த வருநின் அம்மா வாசல் வரை வந்து வரவேற்று சென்றாள்.
அவளை காணவே காத்திருந்தவன் வேகமாய் கீழே இறங்கி வந்தான். வருணின் அப்பாவும் ஹாலிலேயே அமர்ந்திருந்தார்.

வாம்மா , வர்ஷிதா வா, வா . வந்து உட்கார். நீ வருகிறாய் என்றதும், கண்ணாடி முன்னே ஒருவன் பல மணி நேரமாய் போராடிகொண்டிருந்தான் என்று போட்டுடைக்க ,
அம்மா ஏன் இப்படி காலை வாரி விடரிங்க என்று வருண் அதிசயமாய் வெட்கப்பட்டான்.

இந்த கம்பீரமான உருவம் வெட்கப்படுமா என்று ஆச்சர்யமாய் பார்த்து கண்ணால் சிரித்தாள் வர்ஷிதா.

வேலையாள் ஆப்பிள் ஜூஸ் கொண்டு வர அனைவரும் குடித்தனர்.

சார் உங்கள் உடம்புக்கு இப்போது பரவாயில்லையா?என்றாள் வர்ஷிதா.
இன்னும் என்னடா சார், சாருன்னு கூப்பிட்டு அழகா வாய் நிறைய மாமான்னு கூப்பிடம்மா,

சரிங்க மாமா என்றாள்.
சரி வருண் வர்ஷுவுக்கு வீட்டை சுத்தி காமிப்பா? அவ வாழ போற வீட்டை பார்க்க வேண்டாமா?

ஆஹா , என் மனமறிந்த அம்மா , என்று மனதிற்குள் பாராட்டியவன் , வா வர்ஷு என்று கூட்டி சென்றான்.
வாங்க அண்ணி மதியம் சமையலுக்கு கொஞ்சம் ரெடி பண்ணனும் நாம சமையல் கட்டுக்கு போவோம் என உரிமையோடு கூட்டி சென்றாள் வருணின் தாய்.

அம்மாக்கள் இருவரும் சமையலை பார்க்க, சிறியவர்கள் இருவரும் ஒவ்வுறு ரூமை பார்த்து கொண்டு வர, வருண் ஒரு ரூமுக்குள் கூட்டி சென்றான்.

வர்ஷு எனக்கு இந்த ரூம் தான் ரொம்ப பிடிக்கும். என் மனதுக்கு ரிலாக்ஸ் தேவைப்பட்டா நான் அடுத்த நிமிஷம் இங்க தான் இருப்பேன்.

அப்படி என்ன இருக்கு வருண் இங்க? என்று உள்ளே நுழைந்தவள் மலைத்து போனாள்.

அத்தனை புத்தகங்கள் , புற நானுறு, அகநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைக்கள், வைரமுத்து, அப்துல் ரகுமான், சிற்பி , கண்ணதாசன் படைப்புகள்,
கல்கி முதல், ராஜேஷ்குமார், சுஜாதா , பிசினஸ் , கம்ப்யூட்டர் என பல கால கட்ட புத்தகங்களும் அங்கே அழகாய் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்தது .


புத்தகங்கள் படிப்பது வர்ஷுவுக்கு மிகவும் பிடிக்கும். படிக்க ஆரம்பித்தால் தன்னையே மறந்து விடுவாள்.
அப்படிப்பட்டவளுக்கு அந்த ரூம் பிடிக்காத என்ன?

என்ன கண்ணம்மா உனக்கு பிடித்திருகிறதா ? என்றான் காதோரம்.

ரொம்ப என்றாள் வர்ஷு .

அப்படியா என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா? என்றான்.

ஆஹா , நீங்கள் இந்த ரூமை பிடித்திருக்கிறதா என கேட்டதாய் அல்லவா நினைத்தேன்.

நீ அப்படி நினைத்துதான் சொன்னாயா? சரி சரி என்றான் சோகமாய்.

அவன் முகம் வாடுவதை பொறுக்க முடியாமல் , உங்களையும் தான் ரொம்ப பிடிக்குமே என்றாள்.

எல்லாம் சுற்றி பார்த்து விட்டு கீழே வர, மதியம் லஞ்ச் ரெடியாக இருக்க அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

சரி , கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும் வர்ஷு . நாம் கோவை வரை பொய் வரலாமா என்றாள் வருணின் தாய்.

சரி என வருணின் அப்பா தவிர அனைவரும் காரில் புறப்பட்டனர்.

(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (4-Dec-14, 5:42 pm)
பார்வை : 304

மேலே