வீரன்
வீரன்
இள ரத்தம்
எழுச்சியின் சிகரம்
கல்லுடன் நடந்தால்
சொல்லுடன் செதுக்கப்பட்டிருக்கும்
நாளைய விதிகளை
படிமம் காட்டும் சுடரொளி
எழுத்தாளன்,ஓவியன்
சிற்பி,சுமைதாங்கி
தாயின் பாதத்தில்
புன்னைகையரசன்
தாயை பகைத்தவனுக்கு
புறநானூற்றின் போரரசன்
காதலின் வகைகளில்
வலையினில் நீர்மம்
வளையலில் திடம்
உண்மைக்கு மட்டும் இடம்
நேரம் உயிரன்றோ
நேர்த்தி கொள்வான்
நேசம் வேசமெனில்
விலகி செல்வான்
வாள் ருசி காணும்
சதைகளின் பங்கு
இந்த வரையறை இயற்றும்
மாமனிதனுக்கு இல்லை...