குப்பை மேட்டு பாரதி

பைத்தியத்தின் ஜாடை என்னவன் ஜாடை...

கனத்த சுமைகளின் கூடை,என்னவன் இருதயக் கூடை...

குப்பை மேட்டில் தவறி வீழ்ந்த அவ்வைர மெட்டி,

விட்டத்தின் எக்கோடியையும்
எட்டி பார்த்தது..

கண்களின் ஜோடி
எந்த வரைகளையும்
வளைத்து பார்த்தது..

தாழாத சுகமதில் சூன்யமாய் போய் ஒழிந்து கொண்டது..

சமயத்தில் சுய ஜாதி பக்கம்...

சாதி தேமல்களை அவிழ்க்க பார்த்தது,

மொத்த சொத்தை வழக்கங்களையும் கவிழ்க்க பார்த்தது...

வாயோ காற்றை கூவி காரணம் கேட்டது...

அறிவோ முன் குதித்து வெள்ளை தாளின் முதுகை ...கர்ஜனை கவியாய் கடித்தது..

பயன் என்னவோ கிட்டவில்லே...

விவரமரிய மர்ம மனம் மட்டும்...என்நேரமும் சக்தியை சாடியது...

என்ன உரைத்தாளோ அவள்...?

அதில் உடன் பட்டு பவ்யமாய் அவளின் மடியில் ஒட்டி கொண்டது....

பாரதி உன் ஆத்தீகத்துக்கு அர்த்தம் கேட்க எமக்கேதும் தகுதி இல்லே...

காரணம் என்னது சிற்றறிவு,
அது பயத்திலும்,இயலாமையிலுமே காலம் கடத்தும்...

அது உன் போல் காற்றோடு பேசாது,

வானோடு கூவாது...

எவரும் ஒருவர்,
எவையும் இனிமை... என்ற ஒற்றை நேர் கோட்டில் நில்லாது...

எழுதியவர் : சிவசங்கர்.சி (6-Sep-15, 9:23 pm)
பார்வை : 118

மேலே