வசந்த ஓவியம்காதல்

கனாக்களில் நீயிட்ட கன்ன முத்தங்கள் கண் திறந்தும் காயாதிருந்ததே...
என் வாய்விளிம்பில் ஒழுகியபடி உயிருடன் இணைந்த உன்னுயிரின் ஈரங்கள் எனக்கு இன்னொரு ஜென்மம்
தந்தளித்தது..

நான் தத்தளிப்பது..
தள்ளிவிட்டது.. தேக்கி வைத்தது..
என்னை தத்தெடுத்தது..
உன் தூய அன்பின் சாசனங்களோ..?

விழுகிறேன்..விழுந்தேன்...
தெளியும் முன் மீண்டும்
கலைகிறேன்..
கரைகிறேன்..
கசிந்தேன்..
கனிந்தேன்..

கருத்தரித்தேனே..
இனி நானும் தாயா??
இல்லை தாய்மையுணர்ந்த
சேயா??
இந்த விழுமங்கள் விழைந்த
இருதய..இரு இதய
வானவில் நிறங்கள் வரையும்
வசந்த ஓவியம்...
காதல்....!!

எழுதியவர் : குறஞ்சிவேலன் தமிழகரன் (25-Feb-16, 10:19 am)
பார்வை : 144

மேலே