என் காதல் தாவணி 3

மேடு பள்ளம் அதிகம்
உள்ள அழகிய ஆபத்தான
சாலை நீ
வாழைப்பழத்தோல் வழுக்கி
விழுந்த வாலிபன் நான்

கள்ளிச்செடியிலும் காதல்
காய்க்க ஆரம்பித்துள்ளது
ரோஜா உனை கண்டதால்

பூமிக்கு ஓர் நிலவு
என்பவர்கள் உன் கண்களை
காணதவர்கள்

உனக்கு என்ன? பிடிக்கும்
என்கின்றாய்... நீ
ஐயோ இல்லடி
எனக்குத்தான் உன்ன பிடிக்கும்
என்கின்றேன் நான்

உன்னிடம் கேள்வி கேட்கும் போது
மட்டும் ஆசிரியர்கள்
அர்டெல் சூப்பர் சிங்கர்
ஜட்ஜ் ஆகிவிடுகிறார்கள்

கேமரா இல்லாத சைனா
மொபைல் நான் எனை
அழகாக்க வந்த ஃப்லிப் கவர் நீ

பட்டாம்பூச்சி பறக்கும் என்றிருந்தேன்
உனை காணும் வரை

எழுதியவர் : நவின் (25-Feb-16, 10:17 am)
பார்வை : 1265

மேலே