முதல் பார்வையில் காதல்

முதல் பார்வையில் காதல்
பனித் துளியின் சாரல்
கண்ணின் ஓரம்
அவளைப் பார்த்தேன்
மிதக்கிறாள்
பறக்கிறாள்
இதமாய் சிரிக்கிறாள்
அவளை சுற்றிவருகின்றேன்
ஊமையாக இருந்தாள்-ஆனால்
அவள் கண்கள் மட்டும் பேசியது
இவன் யார் என்று
புரிந்தும் புரியாமல் இருந்தேன்
அவளின் சினுங்களைக் கண்டு
காற்றில் கரையும் - அவளின்
வார்த்தைகளைக் கேட்டேன்
காதல் வந்துவிட்டது
காரணம் புரிந்தது
இதழ்கள் மௌனமாக இருந்தது
கண்கள் நான்கும்
காதலைச் சொன்னது
கைப் பிடித்துவிட்டேன் என்னவளை .....
கௌதம்