எதைப் பகிர

..................................................................................................................................................................................
இன்லாண்ட் கடிதமாய் நீல வானம்..
இங்கு பகலெனில் அங்கு இரவு..
கடல் கடந்த நிலையில்
பூங்காற்று பூசிய சுகந்தத்தில்
உன் சுவாசத்தைப் பிரித்தறிகிறேன்...
இருப்பைத் தெரிவிக்கத்தான் முகநூல்..
இல்லாதபோதும் இருப்பதாய் உணரும்
வேடிக்கை மனதுக்கு
வருடக் கணக்காய் சந்திக்காதிருப்பது
வருத்தவே இல்லையே..??
பெண்ணுருவில் வாழும் உன்னைப்
பேணுகின்ற எனக்கும்
என்னுருவில் சிறப்பாக
நீயிருக்கும் வரைக்கும்...
என்ன தெரிவிக்க? எதைப் பகிர?