வங்கக்கடல் சங்கீதம்

வங்கம்பால் சங்கமித்த
உறவுகளை..
தங்கம்போல் பங்கமற்ற
நினைவுகளை..

அங்கத்தால் தாழிடுதல்
ஏங்கலின் அழைப்பிதழே..
சுங்கம் விதைப்பது
சுரங்கமே கண்ணீருக்கு...

தாழிக்கு தாலி
தாளித்தல்...
அவமானமோ..
தாலிக்கு தாழி
தாளித்தல்
அடையாளமோ...

தாமரைத் தாளிகையே..
வாஞ்சைத் தாலி என்கையே..
எருத்தில் ஏறும் எமனல்ல-இது
பூக்கரத்தில் சூடும் பூங்காவனம்..

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (29-May-16, 12:47 pm)
பார்வை : 136

மேலே