ஜன்னலோர நினைவுகள்

தொலை தூர பயணம்
நீ துணையில்லாத தருணம்
பேருந்தின் ஜன்னல் ஓரமாய் நானும்
உன் நினைவுகளால் என்னை சுமந்து செல்கிறாய் நீயும்.........................!

என்னை தீண்டும் தென்றலில்
பூவே உன் வாசம்...................!
சாலையோர பூக்கள் எல்லாம்
நீ எங்கே என்று கேட்கும்......................!

கேட்கும் பாடல் எல்லாம் உன் குரல்................!
காற்றையும் தொட்டு பார்க்கிறது என் விரல்.......................!


பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
கண்ணாடியாய் உடைகிறது என் மனம்......................1


கண் மூடி பார்த்தால்
கனவெல்லாம் நீயடி......................!

நீ இல்ல நேரங்களில்
என் நிழல் கூட தீயடி.........................!

எழுதியவர் : சு சங்கத்தமிழன் (29-May-16, 12:39 pm)
பார்வை : 159

மேலே