கவிதை பஞ்சம்

நீரின்றி போனால்
தண்ணீர் பஞ்சம்
நீயின்றி போனால்?

நீர் மட்டம்
எங்கும் ஒன்றே
நீ இருக்கும்
இடத்தில் ஏங்கும் நன்றே

பள்ளத்திற்கு ஓடும் நீரு
என் உள்ளத்தில் பாயும் உன் உசுரு
உன் உள்ளத்தை நோக்கி நாளும் என் உசுரு துடிக்குதடா

அண்டம்
ஆகாயம்
பூகோளம்
வானம்
பூமி
நிலம்
நீர்
காற்று
நெருப்பு
வெயில்
மழை
மரம்
செடி
கொடி
அணுக்கரு
துகள்
எல்லாம் நீயடா எனக்கு

என்னையில்
உன்னை
முக்கி (போட்டு) (வறுத்து)
விழுங்குகிறேனடா (உண்கிறேனடா)

என் உடையாக
உன்னை உடுத்திக் கொள்கிறேனடா

என் தலையணை நீயடா
புருஷா
உன் உயிர் அணை நானடா
உனை எனக்குள்ளேயே தேக்கிக்கொள்வேனடா
அழுத்தம் தாங்காமல் நான் உடைந்தாலும் பரவாயில்லை
உயிரோடு இருக்கும் வரை
என்னோடு இருந்தாய் என்பதே போதும்
உடைந்து சுக்கு நூறாய் உன்னோடு கிடந்தேன்(கலந்தேன்) என்பதே போதும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-May-16, 12:20 pm)
Tanglish : kavithai pancham
பார்வை : 270

மேலே