இதுவும் ஒன்று
தொண்டை வற்றும் கோடைக்-
கால தாகம்
தீர்க்கும் நீரும் இல்லை
தேடல் காய்ந்து தேங்-
கும் சொட்டல்
மழையில் நனையும்
மெய்நீர் இல்லை
முள்ளில் நிற்கும் பனித்-
துளிகள் ஒழுகிக் கொண்டு
போகும் முன்னே
வீசும் காற்றில் சிதறிப்
பறந்து புல்லை
வருடி மண்ணைச் சேரும்
மூச்சு வரை இந்த
உயிர்
அதன் பின்பு உதிர்ந்த
மயிர்
வாழும் முன்னே பயனாய்
இருந்து
போன பின்னும் போற்றும்
பண்பு
பொய்யாய் ஒட்டி வாழும்
காலம்
நீ உதவாக்கரை என
பேர் சூட்டும்
அடையும் பயணம்
மாறிப் போகும்
இலக்கு கூட
தூர நீங்கும்
சுத்தல் வரை
போன பின்னும்
திரும்பி வந்து சேர்த்துச்
செல்லும்
வாழ்க்கை கதையில்
இதுவும் ஒன்று