பிறந்தநாள் வாழ்த்துக்கள் kp

இதயத்துக்குள் உதயமான அன்பே
வான் சிவந்த உன் நேசத்தினால்
இடமாறித்துடிப்பது நான் மட்டுமல்ல
என் ஈழத்தாயின் தமிழ் சுமக்கும்
இணையத்தின் எழுத்து தளமும் தானே

மங்கை இவள் மண் தொட்ட பாதம்
கண்பட்டதெல்லாம் மின்னுதடி மின்மினியாய்
மண்ணுலகில் பெண்ணிலவு நீயென்று
பெரும் மழையையும் பெருமை சேர்க்குது -உன்
மைத்துளியில் பா இசைத்து

சாலையோரம் வீசும் தென்றல் -உன்
கண் கூசும் சல்லடை நடைகண்டு
மினி சூறாவளியை தோற்றுவிக்க
அந்தியில் வெண் தாமைரையும் -தன்
அழகைக் கூட்ட உன்னழகை கடன் கேட்கிறதே

பாரினிலே மங்கை இவள் உள்ளம்
தன்னகத்தில் கொண்ட நேயத்தினை
தாரளமாகத்தரும் தங்கத் தடாகமாய்
பண்பெனும் உரம் கலந்து -நம்
மனதினை பணியச் செய்யும் சகியிவளென்றே

எந்தன் நெஞ்சில் பதித்திடும் -இவள்
நினைவுகளை பத்திரமாக சேமித்து
உன்னையும் என் நிழலோடு
நடமாடச் செய்கிறேன் -நம்
வாழும் காலங்கள் இனித்திட

முப்பொழுதும்
முத்தமிழ் சுரக்கும் நம் தளத்தில்
உனக்கான இனிய என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சத்யா அக்கா

எழுதியவர் : கீர்த்தனா (24-May-15, 10:11 pm)
பார்வை : 424

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே