தலைக்கவசம்
பள்ளிகூடம் போகையில பாதை வழி சொன்னவனே..
எம்பாடம் புத்தகத்துல உன் எழுத்த கிறுக்குனவனே....
ஓடியாடி விளையாடையிலா எனக்காக தோத்தவனே...
என் கண்ணு தண்ணி வரும்முன்னே தன் கண்ணீர் விட்டவனே..
பசியினுல அலையும்போது ஒரு வரிக்கிய பங்கு பிரிச்சவனே..
தோல்வியினு விழுந்தப்ப தோள் கொடுத்து எழுப்புவனே...
தடம் ஒன்னு மாறயில தட்டி தட்டி திருப்புவனே..
நானில்ல நேரத்துல வண்டி வேகத்துல பறப்பவனே..
வண்டி எடுக்கையில தலைகவசத்த மறப்பவனே...
எலே மச்சான்...
ஒரு சேதி கேட்டனானு...
ஒரு காளை சறுஞ்சு போச்சாம்...
வேகத்துல செத்தாக சோகத்துல சொன்னாக...
பதறி போச்சு என் நெஞ்சு...
மக்கா நீ எங்க இருக்க ...
ஓடி வரேன் ஒன்ன தேடி....
ஒரு பதிலனுப்பு நல்லதா சேதி...
பதறி போய் பாக்கையில பாதி உசுரு உறஞ்சுபோச்சு...
ஐயோ..ஐயோ.. என் நிழலு சரிஞ்சுடுச்சே...
ஐயோ..! என் மனசு எறிஞ்சுடுச்சே....
செத்த என்ன பாரு மச்சான்..
ஏன்டா செத்து போன மச்சான்..
தலைகவசத்த வேணாம் சொன்ன...
தலை வெடுச்சு போச்சே டா...
குரலு வத்திபோச்சு...
என் குருதியும் செத்து போச்சு...
ஏலே மக்கா....
என் மச்சான போல மக்கா சொன்ன கேளுமய்யா ...
வண்டி ஓட்டையில தலைகவசத்த போடுங்கயா...
தயவு செங்சு தலைகவசத்த போடுங்கயா...