விண்ணும் உன்னிடம் தேடிவரும் கைகொடுக்க 555

என் தோழியே...

சீறிப்பாயும் வயதில் ஏன்
கண்மூடி வாழ்கிறாய் ...பு

யல் வேகத்தில் புறப்பட
வேண்டிய நீ...

ஏன் கூண்டுக்குள்
அடைபட்டு கிடக்கிறாய்...

உன் உணர்வுகளை கட்டி
இருக்கும் தடைகளை தகர்த்தெறி...

இளமையில்
காதல் என்பது...

நடைபாதையில் நம்மை இடறி
செல்லும் கற்களை போலதான்...

காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை...

பருவத்தில் ஏற்படும்
ஒரு விபத்துதான்...

அதுவே வாழ்க்கையின்
பயணம் அல்ல...

காதல் தோல்வி என்று ஆரமிக்காத
உன் வாழ்க்கையை முடித்துகொள்ளதே...

உன்னை இடரும் கற்களை
தாண்டி செல்வதை போல...

உன் சோகங்களை
கலைத்து தாண்டி செல்...

வாழ்க்கை உன்
வசப்படும்...

விண்ணும் உன்னை தேடிவரும்
உன்னிடம் கைகொடுக்க.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-May-15, 4:59 pm)
பார்வை : 1233

மேலே