அன்னையைவிட யார் முன்னேற்றுவார் உன்னை

அன்னையை காட்டிலும் எவர்தான் தெய்வம்
தந்தையை காட்டிலும் எதுதான் பந்தம்
தாய் இல்லாமல் சேய்தான் ஏது
தந்தை இல்லாமல் ஞானம் ஏது?

(அன்னையை காட்டிலும் எதுதான் தெய்வம்
தந்தையை காட்டிலும் எதுதான் பந்தம்)

கருவினில் தொடங்கி பிறக்கும் வரையில்
வலிகளை தாங்கி நம்மை காத்தாள்
பாலை ஊட்டி சோறை ஊட்டி
நம்மை வளர்த்தாள் கருணையை கூட்டி

(அன்னையை காட்டிலும் எதுதான் தெய்வம்
தந்தையை காட்டிலும் எதுதான் பந்தம்)

கடமையை உணர்ந்து துன்பங்கள் சுமந்து
தாய் பட்ட பாட்டை யார்தான் அறிவார்?
வளர்ந்தவுடன் நம்மை வளர்த்தவளையே
மிதித்தால் நம்மை யார்தான் மதிப்பார்?

(அன்னையை காட்டிலும் எதுதான் தெய்வம்
தந்தையை காட்டிலும் எதுதான் பந்தம்)

கணவன் மனைவி உறவு வந்தால் என்ன
தாய்மீது பாசம் குறையுமா என்ன?
வயதானபின்னே பெற்றோர்களுக்கு
சேவை செய்திட சங்கடம் என்ன?

(அன்னையை காட்டிலும் எதுதான் தெய்வம்
தந்தையை காட்டிலும் எதுதான் பந்தம்
தாய் இல்லாமல் சேய்தான் ஏது
தந்தை இல்லாமல் ஞானம் ஏது?)

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-May-24, 10:39 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 154

மேலே