தாய்க்கு ஒரு தாலட்டு

தாய்க்கு ஒரு தாலட்டு
++++++++++++++++++

தாயே தாய் உறங்கு..
தாமரை மலரும் காலை வரை..
பாவியைப் பெற்றவளே..
பாடும் சேவல் கூவி வர நீயெழும்பு..

சோறு போடாப்
பிள்ளையைப் பெற்றவளே --நீயும்
சோழக் கொடிப் போல
அசையும் தென்றலில் -தாயே
நீ உறங்கு..

கொல்லி போடவேப் பிள்ளை வேனுமுனு
கோட்டைக் கருப்பன்கிட்ட கையேந்தி நின்னவளே
கோடைமழை தாலட்ட - தாயே
நீ உறங்கு

சனிச்சிட்டான் பிள்ளையினும்
சங்கடத்தைத் தீர்த்திடவானும்
சின்னப் பிள்ளையா நீ நினைக்க -அதை
ஜல்லி ஜல்லியா உடைச்சேனே
ஜல்லிப் பையா நானும் -தாயே
நீ உறங்கு

தலைச்சான் மகனகாப் பிறந்திட்டாமுனு-இனி
தலையெழுத்து மாறுமுனு நீ நினைக்க
தறுதலையா நானும் திரிய
தங்கமகா நினைப்பு மண்ணாச்சு- தாயே
நீ உறங்கு

கம்மல் போடத் தாய் மாமேன்
இல்லையினு
கதறி கதறி அழுதவளே...உன்
தும்மலுக்கும் வைத்தியம் செய்யத்
துடிக்காத மகனைப் பெற்றவளே - தாயே
நீ உறங்கு

பள்ளிப் படிப்பானாம் என் மகன்
பட்டத் துன்பம் தீர்ப்பாமுனு தாயே
நீ நினைச்ச
பாசமற்றப் பரதேசியா நானும் மாற
பரிதவித்து நின்றவளே -தாயே
நீ உறங்கு..

சர்க்கார் வேலை பார்த்து என் மகன்..
சந்தோஷம்மா வைப்பத்திருப்பானு நீ நினைச்ச
சாக்கடையில் பன்னிபோல குடிச்சு விழந்திடவே
சந்தியிலே நின்னு அழுதவளே - தாயே
நீ உறங்கு

கால் கட்டு போட்டாத் திருந்திடுவேனு
கள்ளச் சிரிக்கிக் கவிதாவைப் பெண்பார்த்து
கல்யாணமும் செய்து வச்ச அவ உறவுக்
காக்காக் கூட்டம் வந்து
கத்தியேக் கொத்திப் பிடுங்கிட
கலையிழந்த சிலையாட்டம் ஆத்தா நீ
கல்லா நின்னு தாங்கிக்கிட்டவளே -தாயே
நீ உறங்க..

வடதிசை இடம் வாங்கி
வாழை தென்னை நட்டு வச்சு
வடக்க வாச வச்சு ஆத்தா
வஞ்சிக் கோட்டை தானும் கட்டி வச்சு ஆத்தா
வாச காத்திருக்க ..ஆத்தா வாச காத்திருக்க
வாழப் பணம் தேடி பட்டணம் போன மகன்
வந்நிடுவானு வாசல் காத்திருக்க...

பணம் தேடியேப்
பட்டணம் வந்த நானும்
குணம் மற்றே
குரங்காக நானிருக்கேன் -ஆத்தா

குரங்குக்கும் புத்தி லரும்
கூடியே விரைவில் கூடி வாழ
தானே வரும் அதுவரை - தாயே
நீ உறங்கு..

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (21-Apr-24, 12:18 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 283

சிறந்த கவிதைகள்

மேலே