இதுவும் காதல் பாடலே
பிரிவினிலே அருமைதனை உணர்ந்தோம்
பிறிதொரு புடைசார் அளைத்தோம்
உறவினை ஊழ்வினைபால் இழந்தோம்
தேம் சிந்தினோம்.. பின்சிந்தித்தோம்
சங்கமித்தவுழைகளை களை செய்தோம்
புறங்காட்டிய புன்னகைவழி விழுந்தோம்
ஓமென்று ஓராயிரமுறை ஒப்புவித்தோம்
ஊடல்கூடல் அணுகி உயிர்செய்தோம்
கலவிபின் கடைநிலையில் காதல்
நொறுங்கும் துண்டுகளாய் தெறிக்க
நாளங்களும் நரம்புகளும் உணர்ச்சிகளும்
துரோகமிழைத்தை உணரும் உணர்வுகள்
என்பால் உன்பால் நம்பால்
அன்பால் கண்பார்த்ததெதுவும் கானல் நீர்
மெய்யென்ற வாடகைக்காரன் பொய்
சொன்ன கதையுதுவோ என்றெண்ணி
பிரிவினிலே அருமைதனை உணர்ந்தோம்...