புயலின் மறுபக்கம் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

'புயலின் மறுபக்கம்'தலைப்பே விசித்திரமானது.ஒரு கதையை வாசகன் படிப்பதற்கு தூண்டுகோளாய் அமைவது வரிகளின் வடிவமல்ல அதன் தலைப்பே என்று அழகுற படம்பிடித்துக் காட்டுகிறது இச்சிறுகதை.ஆரம்ப வரிகளின் ஓட்டம் கதையை தொடர்ந்து படிக்கச்செய்யும் நாட்டம்.
கலவரம் நேர்ந்த நிகழ்வின் கோரத்தை 'மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.
மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.., 'இதை விட வேறு வரிகளால் சொல்ல இயலாது என்று தான் நினைக்கிறேன்.

உயிர்கள் பிரியும் போது மனதில் தோன்றும் வலியினை தாங்கிக்கொள்வது மிகக்கடினம் என்பதை தனது கணவனின் பிரிவின் மூலம் தேவகி எனும் கதாபாத்திரம் எடுத்துக்காட்டும் விதம் மிக அருமையாகவுள்ளது.கலவரத்தில் கணவன் மாய்ந்த செய்தி செவிகளுக்கு எட்டுகிறது,மனைவி துடிக்கிறாள்,வலிகளும் அவளுக்கு காவியம் வரைகிறது கதையினில்.....,தன் கணவனின் சடலத்தை வாங்கி மடி தூங்க காத்துக்கிடக்கிறாள் மனைவி 'அவ்வப்போது கணவனின் நினைவுகள் வந்து மனதைப் பிழிய முதுகு குலுங்கி அழுவதும்,சமனப்படுவதும்' உணர்வு பூர்வமான வருடல்கள் .

சொந்தத்தை தூக்கி வீசி விட்டு காதல் துணைவனாய்சொந்தம் கொண்டவனும் அனாதையாய் ஆக்கி போக என்னவறியாது அவள் மனம் கடந்து சென்ற காலத்தில் தாய் விட்ட சாபத்தை நினைவுகூறி இந்தக்கோரத்தை ஒப்பிடும் பாங்கு போற்றத்தக்க உணர்வின் கதை வரிகள்.தன் அண்ணனின் தோழனை காதல் கொண்டு அவளும் அவனை காதலிக்கச் செய்து தங்கள் காதலின் சேர்வுக்காய் தன் அண்ணனின் உதவியை நாடி பிரிவை சமாதானப்படுத்த முயன்றாலும் பேதை மனம் குணமடையவில்லை என்பதை 'திக்குத்தெரியாத காட்டில் தனித்து விடப்பட்ட குழந்தைகளும் மிரண்டு போதல்'என்ற உணர்ச்சி மிக்க வரிகள் பறைசாற்றுகின்றது.

நிர்க்கதியாய் வைத்தியசாலை மரத்தடியில் சொந்தபந்தங்கள் இருந்தும் காலத்தின் சாபத்தால் அனாதையானவளை மரநிழல் தாங்கும் வரிகள் பிரிவின் நிஜங்கள்.முன்றலில் அவள் கண்ட மாந்தர்களின் நிலையை '.குல்லாவும் தாடியும் கைலியுமாய், காவிவேட்டி கறுப்பு வெள்ளை வேட்டி பேண்ட் சட்டைகளுமாய் ஆண்களும், வண்ணவண்ணப் புடவைகளும்,உடல் மறைத்த அங்கிகளுமாய் பெண்களும்'என்ற பார்வையின் அர்த்தம் வர்க்கவேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம் கதாசிரியர் கையாட உத்தியென நினைக்கிறேன்.ஆனால் ஏழை என்றாலும் செல்வன் என்றாலும் சோகம் என்பது ஒரு ஜாதி தான் என்பதை அங்கு கூடியிருந்தோரின் முகப்பாவனை மூலம் எடுத்துச் செல்கிறது கதையின் போக்கு.

தனிமையாய் சோகம் அனுஷ்டிக்கும் தேவகியின் பரிதாபத்தைக்கண்டு ஒரு பெண் அவளிடம் சோகமாய் உணர்வுகளை வார்த்தையாக்குவதன் மூலம் மனிதாபிமானம் இங்கே படம் பிடித்துக் காட்டப்படுகிறது.அதே போல் அந்த பெண் தேவகியிடம் ''எந்த நாயாவது இதையெல்லாம் நெனச்சுப்பாக்குதா..? என்னம்மா நான் சொல்லுறது..? மதத்தைக் காப்பாத்தறேன்னு மனுஷங்களை கொன்னுபுட்டா ஆச்சா..?” என்று கூறுகின்ற வார்த்தைகள் நான்கு வேதத்தின் எந்த பக்கத்தில் இனபடுகொலை சொல்லப்படுகிறது என்பதை வாசகருக்கு உணர்த்தி அறிவுறைகளாய் வழங்குகின்றார் பாடைப்பாளர்.

தேவகி தன் கண்கண்ட நிகழ்வுகளை பள்ளி பருவ வாழ்க்கையுடன் தன் ஆசிரியர் கற்பித்த வரலாறு எனும் கதையுடன் நிஜத்தை ஒப்பிடும் விதம் மிக அருமை என்று சொல்ல வேண்டும்
“மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த அதே காலம்,மேலும் இருபிரிவு ஆரியக்கூட்டம்,ஒன்று ஈரானுக்குள்ளும்,மற்றொன்று கிரீஸிற்குள்ளும் நுழைந்தது.இந்தியப் பழங்குடி மக்களிடம் போரிட்டும்,இணைந்தும் வாழ்ந்து பழகிய அந்த மக்களின் வாழ்க்கை முறை எப்படி இந்துசமயத்தின் முன்னோடியான வைதீக வேதமதத்தை உருவாக்கிற்றோ,அதே போல் ஈரானுக்குள் நுழைந்தவர்களின் சந்ததியாய்த்தான் கிறித்தவமும்,இஸ்லாமும் உருவாயிற்று.., அப்படியானால் நமக்கெல்லாம் ஒரே மூதாதையர்கள்தான்.எனவே மதத்திற்காக சண்டைபோடுவதும் கொலை புரிவதும் கூடாது...”என்று சொல்லப்படுவதன் மூலம் காதையால் உலகிற்கு ஒரு புதுமையான விடயம் அறிவாய் வழங்கப்படுகிறது.

உறவுகளை பிரிந்த சொந்தங்கள் சடலத்திற்காய் இறுதிக்கிரிகைகளை நிறைவேற்றகாத்திருக்கும் தவிப்பின் போது “ஏனுங்கபாய்..பாடியெல்லாம்எப்பக்குடுப்பாங்களாம்..?...,இறுதிகிரிகைகளுக்காக சொந்த ஊர் கொண்டு செல்ல முடியுமா?''என்று வினவப்பட்ட வினாவுக்கு "இன்னும் சற்று நேரத்தில் கொடுப்பார்கள்....அவங்கவங்க சடங்கை முடிஞ்சவரை இங்கேயே பண்ணிட்டு ஒட்டுமொத்தமா ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்கு கொண்டுபோக வேண்டியதுதான்.அங்கதான் பக்கம்பக்கமாய் எல்லா ஜாதிக்கும் இடம் ஒதுக்கியிருக்கே..” என்று வழங்கப்பட்ட பதிலின் வரிகள் இந்த உலகில் வாழும் மனிதர்களின் உள்ளத்தில் உயிர் வாழும் இன குல வேறுபாட்டையும்,அறியாமையின் உண்மையையும் அழகாய் சொல்கிறது கதையின் நேர்த்தியான வளர்ச்சி.

இறுதியாய் ஒவ்வொரு சடலத்திற்கும் சொந்தங்கள் தங்கள் பெயர் சொல்லி வாங்கிப் போகும் போது தேவகி 'இறந்தவர் என் கணவர் பெயர் அப்துல் காதர்' என்று சொல்லியிருந்த விதம் படிக்கும் போது என் நெஞ்சை பதறவைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.ஏனெனின் கதையின் ஆரம்பம் மதக்கலவரத்தில் தொடங்கி இனம் மதம் அறியாத காதலை கலவரம் கொன்று விட்டது என்ற
ஒரு மிகப்பெரிய திருப்பத்துடன் கதையை முற்றுப்பெற வைக்கும் ஆழம் கதைக்கு இன்னும் அழகை கொடுக்கிறது.கதையை படித்து முடித்த பின் என் மனதின் எண்ணவலைகள் சிந்திய கவி வரிகள்......,

"மத விசு வாசிகளே...!!!
தூரிகை துப்பாக்கியாகிறது.......
மூன்று தட்டு சாம்பல் தருகிறேன்.
எந்த மதம் என்று இனம் காட்டுவீர்களா?.....
பூமிக்கு மேலே வாழும் போது
வர்க்கம் பிரிக்கிறிர்களே.....!!!
பூமிக்குக் கிழே போகும் போது எதைப் பிரிப்பீர்கள்.
மதம் என்பது வெறும்
உள்ளாடை தான் அதுவே ஆடையாகி விடாது,"

மேற்படி திறனாய்க்கட்டுரை என் சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்
எழுதியவர்:மு.ஹ.மு. ஸர்பான்
இடம்:ஓட்டமாவடி-03 இலங்கை
தொலைபேசி இல:94 756795952
தேசிய அடையாள அட்டை இல:972410063v

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (24-May-15, 1:55 pm)
பார்வை : 359

சிறந்த கட்டுரைகள்

மேலே