பொள்ளாச்சி அபி யின் தலபுராணம் -ஒரு கண்ணோட்டம்

ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களின் "தலபுராணம்" என்கின்ற சிறு கதையைப் படித்தேன் ,மகிழ்ந்தேன் .சிறு கதைதான், ஆனால் அதன் சிற்றுடலிலே சிந்தனையைத் தூண்டும் அருமையான கருத்துக்கள் என்னை இந்த சிறு கதையை, முழுமையாய், வரிக்கு வரியாய், ஒரு வார்த்தைகூட விடாமல் படிக்க தூண்டியது ..கதையின் பின் ஐந்தே , பாத்திரங்கள் ,கணவன்-மனைவி,அவர்களின் இரு குழந்தைகள் , மற்றும் அவர்கள் மேற்கொண்ட அம்மன் தரிசன பயணத்தின் போது, சாலையிலே ,எதேர்ச்சையாக , மயங்கிய நிலையில் கிடந்த ஒரு கிழவிக்கு இவர்கள் பரிவு காட்டி ,அவளையும் தங்கள் வாகனத்தில் கிடத்தி பயணத்தை தொடர்வது ; இடையில் முதாட்டி இவர்கள் செல்ல இருக்கும் கோயிலுக்கு எதிரே இறக்கி விடல் ,பின்னர், அந்த கணவன்,மனைவி கோயில் தரிசனம் முடிந்த பின்னர் கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் நின்ற கோலத்தில் வைக்கப்பட்ட அந்த அம்மனின் பின்னணியில் நின்ற கதையை கோயில் பூசாரி விவரமாய்க் கூற , அதில் பதிந்த கிடந்த உண்மைச் சம்பவங்களும் அதற்கு மெருகூட்டும் ஜோடிக்கப்பட்ட சுவையான ,ஆனால் காலத்திற்கு ஒவ்வாத சம்பவங்கள் , சரித்திரத்தை பல நூற்றாண்டுகளுக்கு பின்னே எடுத்து செல்லும் வேட்கையில் சிலர் காலத்திற்கு ஒவ்வாத பாத்திரங்களை நுழைய விட்டு மாட்டிகொள்வது ஆசியமாக தெளிவு படுத்திகிறார், பொள்ளாச்சி அபி அவர்கள்.அதுதான் ஐநூறு வருடங்களுக்கு முன்பு போலீசு காரர் இருப்பதாக கூறுவது .சில கோயில்களின் தலபுராணம் எழுதுவோரும் அந்த கோயில்களின் கட்டிட அமைப்பிற்கு தோது படாத எண்ணங்களை கோர்த்து ,சரித்திரத்தை குலைப்பது தெளிவாகிறது .அதே சமையம் ஆசிரியர் ஒரு சிறிய "சிலப்பதிகார ",உணர்வையும் தோற்றுவிக்கிறார்.அந்த காப்பியத்தில் தன கணவன் கள்வனல்ல என்பதை நிலை நிறுத்த கண்ணகி பொங்கி எழுந்து பாண்டிய மன்னனையும்,அவன் ராணியையும் தவறுணர வைத்து அவர்களே உயிர் துறக்க செய்கிறாள் , பின்னே, மீளா கோபம் கொண்டு ,கலியை மாறி ,மதுரையை எரிக்கிறாள் ,பின்னே ,குரவர்கள் கூறினார் அவள் விமானம் ஏறி வின்னடைண்டல் என்று .இதில் எத்துனை உண்மை ,எத்துனை கோர்க்கப்பட்ட சம்பவங்கள் என்பது அவரவர் எண்ணத்தில் அமர்வது. அது போல ,அபியின் கதையிலும்,தன தந்தையை கொன்று தன்னை நயவஞ்சகமாக தனக்கு இறையாக்க துணிந்த அந்த,மன்னனை(இல்லை காலத்தை நோக்க ஜமின்தாரை) காளியாய் சாடி கொன்ற அந்த இளம் பெண்
பின்னே அந்த இடத்தை விட்டு மறைய , கிராமத்தார் அவளை தெய்வமாக எண்ணி கோயில் செய்து கும்பிட, பின்னே அவளுக்கு சிலையும் வடித்தனர் ஆங்கு ஒரு மண்டபத்தில் ;நம் கதையில் வரும் கணவன் மனைவி ,இல்லை,அந்த கணவன்,அந்த சிலையை படம் பிடிக்க எத்தனிக்கையில்,அந்த சிலையைத் தழுவிய வண்ணம் சிலையையின் முகம் ஒக்கும் உருவத்தை தன காமிராவின் லென்ஸ் மூலம் காண்கிறான் -பின்னர் அந்த முகம் தானும் தன மனைவியும் தங்கள் பயணத்தில் சாலையில் கண்டெடுத்த கிழவியின் முகம்தான் என்று அறிந்து சட்ற்றே தினரிபோகிறான்.இங்கு அசிறியர் கூற நினைபடு என்ன வென்றால் அண்ட கிழவிக்கு இப்போது வயது எழுபது ;அவள் அந்த ஜமின்தாரை கொன்றது ஐம்பது வருடங்களுக்கு முன்னே ; அதை, அந்த கோயில் பூசாரி திரித்து ,ஐநூறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமாக சரித்திரத்தை மாற்றி அமைத்து கூறினார்.மேலும் அந்த மங்கையை ஊரார் அவள் காணாமல் போகவே ,அவளை காளியாக பாவித்து சிலை வைத்தனர்.அன்று கண்ணகிக்கு கோயில் அமைதடு போல.அந்த அன்றைய இளம் பெண்ணே, தனக்கு சிலை வைத்தது அறிந்து யாரும் அறிய வண்ணம் தன சிலையை தொட்டு கண்ணீர் வடிக்கிறாள் .இதை, அசிறியர் அபி ,தன
கதையின் முக்கிய கடபதிரம் தன கமெராவில் பதிவு செய்தது அவர் எழுத்தில் ஒரு ஜெயகாந்தனை காணா முடிகிறது.

இந்த கதையை அசிறியர் வெகு நேர்த்தியாக, விறு விருப்பாக மேலும் மேலும் படிக்கும் வண்ணம் எழுதி இருப்பது குறிப்பிட தக்கது.

எழுதியவர் : (24-May-15, 12:15 pm)
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே